படப்பிடிப்பில் பிரபல நடிகரிடம் சமூக அகலத்தை கடைப்பிடித்த நடிகை...!

Actress meena shares her photo with mohanlal keeping social distance goes viral

by Nishanth, Oct 16, 2020, 18:07 PM IST

திரிஷ்யம் 2 படப்பிடிப்பின் இடைவேளையில் நடிகர் மோகன்லாலுடன் சமூக அகலத்தைக் கடைப்பிடித்து நடிகை மீனா எடுத்து வெளியிட்ட போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.தற்போது வேகமாகப் பரவி வரும் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த முக்கியமான வழிகளில் ஒன்று சமூக அகலம்.

பொது இடங்களில் குறைந்தது அடுத்தவர்களிடம் இருந்து 4 அடியாவது இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் சினிமா படப்பிடிப்புகளில் இதை எப்படி கடைப்பிடிக்க முடியும் என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது. இதனால் காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திரிஷ்யம் 2 படப்பிடிப்பின் போது நடிகர் மோகன்லாலுடன் சமூக அகலத்தைக் கடைப்பிடித்து எடுத்த ஒரு புகைப்படத்தை நடிகை மீனா, சமூக அகலத்துடன் என்ற தலைப்புடன் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் சமூக அகலத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கருத்தைப் பரப்பும் நோக்கத்தில் தான் மீனா இந்த போட்டோவை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

திரிஷ்யம் 2 வின் படப்பிடிப்பு தற்போது கேரளாவிலுள்ள தொடுபுழாவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் பாகம் எடுக்கப்பட்ட அதே வீட்டில் வைத்துத் தான் இரண்டாவது பாகத்திற்கான காட்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல் பாகத்திலும் மோகன்லாலுடன் மீனா தான் ஜோடியாக நடித்தார். இவர்களது மகள்களாக நடித்த அதே அன்சிபாகானும், எஸ்தர் அனிலும் தான் இந்தப் படத்திலும் மகள்களாக நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை