கோர்ட் அதிரடி உத்தரவு நடிகை கங்கனா அவரது தங்கை ரங்கோலி சண்டேல் ஆகியோருக்கு எதிராக ட்வீட் மற்றும் நேர்காணல் மூலம் வகுப்பு வாத பதட்டத்தைத் தூண்டியதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு பாந்த்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மும்பை போலீசாருக்கு உத்தரவிட்டது. அதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்தில் கங்கனா ரனாவத், பாரிஸில் மதத்தின் பெயரில் தலை துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திக்கு பதிலளிப்பதற்காக ட்விட்டரில் மெசேஜ் வெளியிட்டர். “இந்துக்களின் உயிர் ஒரு பொருட்டல்ல, மேற்கத்திய நாட்டில் இந்த தேதி வரை மில்லியன் யூதர்களின் இனப் படுகொலை திரைப் படங்களை உருவாக்கிருக்கின்றனர்.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் அடிமைத் தனத்தின் மூலம் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர் என்பது நமக்குத் தெரியுமா? WW2வில் யூதர்களை விட 100 மடங்கு அதிகம், ஆனால் இந்து இனப் படுகொலை பற்றிய திரைப் படங்கள் எதுவும் இல்லை.
ஒரு மதத்தை விமர்சிப்பதும், ஆய்வு செய்வதும் மிகவும் சகிப்புத்தன்மை அற்றது. முற்றிலும் ஆண் மேலாதிக்கம் பெண்கள், விலங்குகள், தாவரங்கள் அல்லது சுற்றுச் சூழலை வணங்குவதில்லை, இன்றைய காலங்களில் இது வேகமாக வளர்ந்து வரும் மதமாகும்.
மேலும் புத்தி ஜீவிகளால் பாதுகாக்கப்படுகிறது. ஒரு கேலிச்சித்திரத் திற்காக ஒரு ஆசிரியர் தலை துண்டிக்கப்படுகிறார், படையெடுப்பின் போது அந்த படையெடுப்பார்கள் நம் மக்களுக்கு என்ன செய்திருக்க வேண்டும் என்பதை மட்டுமே நாம் கற்பனை செய்து பார்க்க முடியும். அமைதியான மதம் சகிப்பின்மை என்று இந்துக்கள் காட்டியிருந்தால், பாலிவுட் முழுவதும் நீண்ட காலத்திற்கு முன்பே தலை துண்டிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் எங்கள் மதத்தை இழிவுபடுத்தும் படங்களைத் தயாரிக்கிறார்கள், பின்னர் அவர்கள் காவிக்குப் பயப்படுவதாகக் கூறுகிறார்கள். பிரச்சாரத்தைப் பாருங்கள், அது அபத்தமானது மற்றும் ஊமை தர்க்கம்."எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மெசேஜ்தான் கங்கனா மற்றும் அவரது தங்கை ரங்கோலி மீது இனவாதத்தைத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்ய வைத்திருக்கிறது