காதலுக்கும், ஹனிமூனுக்கும் போராடி ஜெயித்த நடிகர்..

Rana and Miheeka on a honeymoon trip

by Chandru, Oct 18, 2020, 11:53 AM IST

பல நட்சத்திரங்கள் தாலி கட்டிய மறுநாளே ஹனிமூன் பறந்து விடுவதுண்டு. ஆனால் ஒரு நடிகருக்கு காதல் கைகூடவே ஆண்டுக்கணக்கில் ஆனது, ஒரு வழியாக திருமணம் முடிந்த நிலையில் ஹனிமூனுக்கு 2 மாதம் கழித்து சென்றிருக்கிறார். அவர் வேறுயாருமல்ல பாகுபலி வில்லன் நடிகர் ராணா தான். அவரது காதல், ஹனிமூன் போராட்டம் சுவாரஸ்யதை காண்போம்:

தமிழில் அஜீத்தின் ஆரம்பம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ராணா அனுஷ்காவுடன் இஞ்சி இடுப்பழகி மற்றும் பெங்களூரு நாட்கள் படங்களில் ஹீரோவாக நடித்தார். காடன், மடை திறந்து படங்களில் நடித்துவருவதுடன் தெலுங்கில் பல படங்களில் நடிக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் ராணாவும் நடிகை திரிஷாவும் நீண்ட நாட்களாக நட்பில் இருந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்யவுள்ளதாகவும் கிசுகிசு நிலவி யது. ஆனால் திடீரென்று இருவரும் பிரேக் அப் செய்துக் கொண்டு பிரிந்தனர். அதன்பிறகு புதிய காதலுக்காக காத்திருந்தார். நடிகை தமன்னாவுடன் இணைத்து காதல் கிசுகிசுவில் சிக்கினார். அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. மும்பை ஸ்டார் ஓட்டலில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்றார் ராணா. அபோது எதிர்பாராதவிதமாக மிஹீகாவை சந்தித்தார் ராணா. இருவருக்கும் பார்த்தவுடனே காதல் பற்றிக்கொண்டது, இந்த காதலும் புஷ்வானம் ஆகிவிடக்கூடாது என்று எண்ணிய ராணா காதல் விஷயத்தை குடும்பத்தாரிடம் தெரிவித்தார். குடும்பத்தினரும் காதலுக்கு பச்சை கொடி காட்டியதுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

ராணாவின் திருமணத்தை தடபுடலாக நடத்த திட்டமிட்ட நிலையில் கொரோனா ஊரடங்கு புகுந்து திட்டத்தை கெடுத்தது. ஊரடங்கு முடிந்த பிறகு திருமணம் நடத்த எண்ணிய நிலையில் அது முடிவதுபோல் இல்லை கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று தவித்தார் ராணா. கொரோனா ஊரடங்கிலேயே திருமணத்தை நடத்த எண்ணினார். ரகசியமாக ராணா. மிஹீகா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது இதையடுத்து சென்ற ஆகஸ்ட் மாதம் இவர்கள் திருமணமும் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளுடன் குறைந்த எண்ணிக்கையாலான உறவினர்கள் பங்கேற்க ஐதராபாத்தில் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு வெளிநாட்டில் ஹனிமூனுக்கு செல்ல எண்ணிய நிலையில் கொரோனா பரவல் காரணமாக விமானங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. பிறகு ஊரடங்கு தளர்வில் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து ராணா, மனைவி மிஹீகாவுடன் வெளிநாட்டு தீவு ஒன்றுக்கு ஹனிமூன் புறப்பட்டு சென்றார். வெளிநாட்டு கடற்கரையில் ராணாவுடன் ஜாலியாக சுற்றித்திரியும் படங்களை மிஹீகா வெளியிட்டிருக்கிறார். அது வைரலாகி வருகிறது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை