2 வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகை தமன்னா, ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில தினங்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார். பூரண குணம் அடைந்த நிலையில் 2 தினங்களுக்கு முன் வீடு திரும்பினார்.
கொரோனாவிலிருந்து மீண்ட தமன்னா வீடு திரும்பியதும் வழக்கமான தனது உடற்பயிற்சிகளை தொடங்கினார். முன்னதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தமன்னா தற்போது ஒரு நன்றி மெசேஜ் வெளியிட்டிருக்கிறார். மருத்துவமனையில் உள்ள அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவி ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். அதில் கூறும்போது, கொடிய வைரஸிலிருந்து குணமடைந்த பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பு அவர்கள் அனைவருடனும் அவர் எடுத்துக்கொண்ட படங்களை வெளியிட்டுள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவளாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் மிகவும் நோய் வாய்ப்பட்டிருந்தேன். பலவீனமாக இருந்தேன், மனத்துக்குள் ஒரு பயத்துடன் இருந்தேன். ஆனால் சிறந்த முறையிலும் வசதியாகவும் எனக்கு டாக்டர்கள், நர்ஸ்கள் சிகிச்சையளித்தனர். அவர்கள் காட்டி அன்பு, கருணை, நேர்மையான அக்கறை மற்றும் அக்கறை எல்லாம் சேர்ந்து எனக்கு மனதை தைரியடுத்தியது என்றார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தமன்னாவின் பெற்றோர் முதலில் உள்ளாகினர். பின்னர் தமன்னா ஹைதராபாத் படப்பிடிப்பில் பங்கேற்க அங்கு தமன்னவுக்கு கொரோனா தொற்று கண்டறி யப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், தமன்னா தனது வரவிருக்கும் தெலுங்கு படமான சீடிமார் படப்பிடிப்பில் மீண்டும் பங்கேற்க காத்திருக்கிறார். இதில் கோபிசந்த் ஹீரோவாக நடிக்கிறார்.