நடிகர் தனுஷ் கொண்டாடிய 2 வருட படம்.

Dhanush celebrated two years of Vada Chennai

by Chandru, Oct 18, 2020, 12:13 PM IST

தனுஷ் நடித்த படம் வட சென்னை கோலிவுட் படங்களில் அதிகம் பேசப்படும் ஒன்றாகும். வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் வெளியான மற்றொரு பாக்ஸ் படம். வட சென்னை அதன் ஸ்கிரிப்ட் மற்றும் திரைக்கதைக்காக விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படத்தின் 2ம் பாகம் உருவாக்கப்படும் என்று ஏற்கனவே இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.

வட சென்னை படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. தனுஷ் இந்த படத்தின் சாதனையை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததன் மூலம் கொண்டாடினார். படத்தில் தனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்றான அன்புவாக நடித்த அந்த போஸ்டரை தனுஷ் பகிர்ந்தார், படத்துக்கு ஆதரிவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். வடசென்னையின் 2 ஆண்டுகள் !! அனைவருக்கும் நன்றி என்று டிவிட்டரில் நன்றியை உணர்த்தும் வகையில் வணக்கம் சொல்லும் ஈமோஜியை பகிர்ந்திருக்கிறார். அதேபோல் தனுஷின் வட சென்னை தயாரிப்பு நிறுவனமும் போஸ்டரைப் பகிர்ந்து கொண்டு படத்தின் வெற்றியை கொண்டாடியது.

ஒரு ரவுடி தனது காதலியை கிண்டல் செய்து தாதா உலகில் நுழைகிறார். திறமையான ஒரு கேரம் வீரரின் வாழ்க்கையைச் சுற்றி படம் சுழன்றது. அவர் ஒரு கேங்க்ஸ்டர் குழுவில் இணைகிறார், அவர்கள் அவரைப் பயன்படுத்தி தங்கள் சண்டையைத் தீர்த்துக் கொள்கிறார்கள். இறுதியில் சிக்கலில் இருக்கும் தனது மக்களுக்காக முழு கேங்க்ஸ்டர் குழுவுக்கு எதிராக மாறுகிறார் தனுஷ். இப்படத்தில் சமுத்திரகனி, கிஷோர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். தனுஷ் அடுத்து ஜெகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்திருக்கிக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து கர்ணன் படத்தில் நடித்து வருகிறார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை