புதியபடத்துக்கு மதிப்பெண் கேட்ட பிரபல ஹீரோ.. எவ்வளவு மார்க் தெரியுமா?

Vishal Chakra Movie Test Preview Postive Result

by Chandru, Oct 18, 2020, 12:14 PM IST

ஹாலிவுட்டில் படங்கள் தயாரித்து முடிந்தவுடன் டெஸ்ட் பிரிவியூ என்ற முறையில் ரசிகர்களின் கருத்தை அறிய பட ரிலீஸுக்கு முன் அப்படத்தை திரையீட்டு காட்டுவது வழக்கம். அந்த பாணியை நடிகர் விஷால் தான் நடித்துள்ள சக்ரா படத்துக்கு கையாண்டிருக்கிறார். படம் பார்த்தவர்களை அதற்கு மதிப்பெண் போடவும் விஷாலே கேட்டுக்கொண்டார்.

நடிகர் விஷால் தனது பிலிம் பேக்டரி பட நிறுவன சார்பில் தயாரித்து நடித்த சக்ரா படத்தின் டெஸ்ட் ப்ரிவியூ எனப்படும் சோதனை முறையிலான முன் திரையீட்டுக் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. இப்படத்தை எம்.எஸ். ஆனந்தன் இயக்கியுள்ளார். இரண்டாவது நாளாக சக்ரா படத்தின் டெஸ்ட் ப்ரிவியூ திரையிடப்பட்டது. படம் பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்ததன் மூலம் பரவலான வரவேற்பை அளித்துள்ளனர். டெஸ்ட் ப்ரிவியூ காட்சிக்கு வருபவர்களிடம் படம் பற்றிய அவர்களின் கருத்துக்களை அறிவதற்காக ஒரு கேள்வித்தாள் வழங்கப்படும். அதில் அவர்கள் ஆணா பெண்ணா? வயது, தொழில், படத்தில் நேர்நிலை அம்சம் எது? படத்தில் உயிர்ப்போடு இருக்கும் காட்சியுள்ள பகுதி எது? எதிர்மறை அம்சம் எது? பிடிக்காத காட்சி எது? ஒட்டு மொத்த மதிப்பெண் என்ன, நட்சத்திரங்களின் எண்ணிக்கைகளில்? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுப் பதில்கள் பெறப்பட்டன.

பெரும்பாலானவர்கள் நேர் நிலையான பதில்களை அளித்து தங்களது திருப்தியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். சக்ரா படத்தை ரிலீஸ் செய்தவுடன் ஆர்யாவுடன் புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார் விஷால். பாலா இயக்கிய அவன் இவன் படத்துக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் இதுவாகும். மேலும் துப்பறிவாளன் 2ம் பாகம் படத்தை இயக்கி நடிக்க ஸ்கிரிப்ட் தயாரித்து வருகிறார் விஷால்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை