காரை மடக்கிய அதிகாரிகளுடன் நடிகை வாக்குவாதம்.. மாஸ்க் போடாததால் தகராறு..

by Chandru, Oct 18, 2020, 14:27 PM IST

கடந்த 2017ம் ஆண்டு எதிர்பாரத ஒரு படமாக திரைக்கு வந்தது அருவி. அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கி இருந்தார். இதில் அதிதி பாலன் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் அஞ்சலி வரதன், லட்சுமி கோபாலசாமி, கவிதா பாரதி உள்பட பலர் நடித்திருந்தனர். எய்ட்ஸ் நோய் பாதித்த ஒரு பெண்ணை சிலர் அவளுக்கு நோய் இருப்பது தெரியாமல் சீரழிக்கின்றனர். பின்னர் ஒரு கட்டத்தில் தன்னை மானபங்கப் படுத்தியவர்களை கடத்தி சந்து அவர்களை கொலை செய்யப்போவதாக மிரட்டுகிறார். அதன் முடிவு என்ன என்பது படத்தின் கிளைமாஸ். இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிதி பாலனுக்கு விருதும் பாராட்டும் கிடைத்தது. கைநிறைய படங்களும் தேடி வந்தது ஆனல் அவர் போட்ட கண்டிஷன்கள் வந்த வாய்ப்பு களை கைநழுவிப்போகச் செய்தது.


கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள் அடைந்து கிடந்தார் அதிதி. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு சுற்றுலா தளங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் நடிகை அதிதி காரில் புறப்பட்டு கொடைக்கானால் சென்றார். ஏரிக்கரை சாலையில் அவரது கார் சென்றபோது அங்கு சோதனை செய்துக் கொண்டிருந்த சுகாதார துறை அதிகாரிகள் அதிதி காரை வழி மடக்கி நிறுத்தினார்கள். கொரோனா கட்டுபாடுகளின் படி அதிதி முககவசம் அணியாமல் காரில் வந்ததால் அவரை அதிகாரிகள் அபராதம் கட்டக் கேட்டனர். அதற்கு அதிதி மறுப்பு தெரிவித்து அவர்களிடம் வாக்கு வாதம் செய்தார். ஆனால் அதை அதிகாரிகள் காதில் வாங்காமல் அபராதம் கட்டியே ஆக வேண்டும் என்று கண்டிப்பாக தெரிவித்தனர். வேறு வழியில்லாமல் அதிதி ரூ 200 அபராதம் கட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதிகாரிகளிடம் நடிகை அதிதி வாக்கு வாதம் செய்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Get your business listed on our directory >>More Cinema News