பிக்பாஸ் சீசன் 4, விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகி வருகிறது. ஷோவை கமல்ஹாசன் நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களாக பிக்பாஸ் வீடு அல்லோலபட்டது. அரக்க வம்சம், அரச வம்சம் என இரண்டாகப் பிரிந்து போட்டியாளர்கள் மோதிக் கொண்டனர். பிறகு பட்டிமன்றம் என்ற பெயரில் ஒருவரையொருவர் தாக்கி பேசினார்கள்.இன்றைக்கு என்ன நடக்கப் போகிறது என்ற புரோமோ வெளியாகி இருக்கிறது.
இதில் எவிக்ஷன் போட்டியாளரை எப்படி அடையாளம் காண்பது, வெற்றியாளரை எப்படி அடையாளம் காண்பது என்பது பற்றிய சுவாரஸ்ய போட்டி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் எல்லோருமே போட்டியாளர்கள் ஓட்டுப் போட்டுத் தேர்வாகவிருக்கிறார்கள். அது எப்படிச் சாத்தியம் என்பதற்கான விளக்கத்தை அனிதா அளித்திருக்கிறார்.
போட்டியாளர்கள் உங்களை நீங்களே 1லிருந்து 16வரை வரிசைப்படுத்த வேண்டும். 1வது எண்ணில் இருக்கும் பிக்பாஸ் போட்டியாளர் வெற்றியாளரைக் குறிக்கும் அதைத் தொடர்ந்து வரும் வரிசை ஒவ்வொரு வார எவிக்ஷனை குறிக்கும் 16வதாக நிற்கும் நபர் இந்த வார எவிக்ஷன் போட்டியாளராக இருக்கலாம் என்று ஒரு அதிரடி அறிவிப்பை அனிதா வெளியிட்டு பீதியைக் கிளப்பினார். போட்டியைப் பற்றிய விளக்கத்தை வாசிக்கும் போதே முந்திரிக்கொட்டை போல் முந்திக் கொண்ட அர்ச்சனா, எனக்கு எவ்ளோ ஓட்டு போட்றீங்க என்று அதட்டலாகக் கேட்டார். அதைக் கேட்டதும் வீட்டுக்குள் ஒரே முணுமுணுப்பு எழுகிறது.
போட்டி விவரத்தைக் கேட்டதுமே யாருக்கு எவ்வளவு ஓட்டுப் போட்டு எங்கு நிற்க வைப்பது என்று கணக்குப் போட ஆரம்பித்து விட்டார்கள். யாரெல்லாம் எந்த எண்ணில் நிற்கப்போகிறார்கள் என்பதை எப்படி முடிவு செய்யப் போகிறார்கள் என இரவில் தெரியும் இதில் மொத்தம் 16போட்டியாளர்கள் இருக்கிறார்கள். யார் யாருக்கு ஓட்டு போடுவார்கள், யார் முதலில் நிற்கப்போகிறார், யார் கடைசியில் நிற்கப்போகிறார் என்பது வெளிப்படையாகத் தெரியும்.