சர்ச்சை பாடகி என்ட்ரியால் பிக்பாஸ் போட்டியாளர்கள் கிலி.. பிரபல நடிகை எச்சரிக்கை..

Kasthuri warning about Suchithra Entry in to Bigg Boss 4 House

by Chandru, Oct 23, 2020, 17:36 PM IST

பாடகி மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளரான சுசித்ரா விரைவில் பிக்பாஸ்4 ஷோவில் என்ட்ரி தரவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2 வருடத்துக்கு முன் சுசிலீக்ஸ் என்ற இணைய தள டிவிட்டர் பக்கத்தில் பிரபல நடிகர், நடிகைகள் பற்றி சுசித்ரா பல்வேறு அவதூறு வீடியோக்கள் வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல பிரபலங்கள் இதனால் அதிர்ச்சிக்குள்ளாயினர். போலீஸ் வரை புகார் சென்றது. பெரிய கலவரத்துக்கு பிறகு இது அடங்கியது.

பின்னர் சுசித்ரா மன அமைத்திக்கான மையத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்றதாகக் கூறப்பட்டது. அதன்பிறகு சமூக வலைத்தளத்திலிருந்து விலகி இருந்தார். சமீபத்தில் சுசித்ரா பிக்பாஸ்4 ஷோவில் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் பிரபல நடிகை கஸ்தூரி போட்டியாளர்களை எச்சரித்து ஒரு மெசேஜ் பகிர்ந்திருக்கிறார்.

அதில் சுசிலீக்ஸ் புகழ் சுசித்ரா போறாங்களாம். ஒரு கேமரா கண்டெண்ட்டுக்கே ஊரே அலறிச்சு.. இங்கே 100 கேமரா வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் கட்டாயமாக சமூக இடை வெளியை கடைப்பிடியுங்கள் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார். எது எப்படியோ போட்டியில் சூடு பறந்தால் சரிதான். சுசி வீட்டுக்குள் போனால் போட்டியாளர்களுக்குக் கிலி பிடிக்கப்போவது உறுதி.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை