கொரோனாவுக்கு பின் தியேட்டரில் விஜய் படம் ரீ ரிலீஸ்.. பேனருக்கு மாலை போட்டு ரசிகர்கள் குஷி

Vijay Bigil Movie Re release in Pondicherri

by Chandru, Oct 24, 2020, 16:12 PM IST

கடந்த ஆண்டு அக்டோபர் 25ம் தேதி திரைக்கு வந்த படம் பிகில். தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க அட்லீ இயக்கி இருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்த இப்படம் பெரிய வெற்றி பெற்றது. இதில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், ரெபா மோனிகா ஜான், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் கடந்த 6 மாதமாக மூடிக்கிடந்தது. ஊரடங்கு தளர்வை அறிவித்த மத்திய அரசு அக்டோபர் 15ம் தேதி முதல் தியேடர்களை திறக்கலாம் என்று அறிவித்தது, தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. புதுச்சேரியிலும் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் புதிய படங்கள் யாரும் ரிலீஸ் செய்யாத நிலையில் தியேட்டருக்கு ரசிகர்களை ஈர்க்க முடியாத சிக்கல் உள்ளது.

இதையடுத்து பிரபல நடிகர்கள் நடித்துள்ள படங்களை ரீ ரிலீஸ் செய்கின்றனர். புதுச்சேரி தியேட்டரில் விஜய் நடித்துள்ள பிகில் படம் மீண்டும் வெளியிடப்பட்டது. விஜய் பேனருக்கு மாலை போட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.கால்பந்து விளையாட்டைப் பின்னணியாகக் கொண்டு இப்படத்தில் தந்தை, மகன். என இரட்டை வேடத்தில் விஜய் நடித்திருக்கிறார். ஒளிப்பதிவை 'மெர்சல்' புகழ் கே.ஜி விஷ்ணு கையாண்டார். இந்த படம் இப்போது புதுச்சேரியில் உள்ள சண்முகா சினிமாஸில் மீண்டும் வெளியாகி ஒரு நாளைக்கு மூன்று ஷோக்கள் திரையிடப்பட்டு வருகிறது.

'மெர்சல்' மற்றும் தெறி படங்களுக்கு பிறகு அட்லீ மற்றும் விஜய் இணைந்து பணியாற்றிய படம் பிகில். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், 'வில்லு படத்திற்குப் பிறகுப் பத்து வருடங்களுக்குப் பிறகு நயன்தாரா விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார்.பிகில் படம் வெளியானதில் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தியேட்டரில் பார்க் கிங் கட்டணம் குறைக்கப்பட்டிருக்கிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை