முன்ஜாமீன் கேட்ட பிரபல ஹீரோவின் தந்தை...!

Vishnu Vishals father files a petition seeking anticipatory bail

by Chandru, Oct 24, 2020, 17:07 PM IST

நடிகர்கள் விஷ்ணு விஷால் ,சூரி இருவரும் வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமாயினர். அதன்பிறகு சில படங்களில் இணைந்து நடித்தனர். இருவரும் இணைந்து நடித்த வேலன்னு வந்துட்ட வெள்ளக்காரன் படம் பெரிய வெற்றி பெற்றது. சமீபத்தில் நடிகர் சூரி போலீஸில் ஒரு புகார் கொடுத்தார்.அதில் விஷ்ணு விஷாலின் தந்தையும் ரமேஷ் குடவாலா மற்றும் அன்பு வேல் ராஜன் என்பவரும் நிலம் வாங்கி தருவதாக தன்னிடம் கோடிகளில் பணம் பெற்றனர்.

ஆனால் முறைப்படியான இடத்தை எனக்கு வாங்கி தராமல் பண மோசடி செய்துவிட்டனர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து இருவரிடமும் விசாரித்து பணத்தைப் பெற்றுத் தர வேண்டும் எனக் கூறி இருந்தார். விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா முன்னாள் போலீஸ் அதிகாரி ஆவார். அவர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ரமேஷ் குடவாலா சென்னை உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக, சூரியின் புகார் பற்றி கருத்து தெரிவித்த விஷ்ணு விஷால் இந்த வழக்கில் எனது தந்தையின் பெயர் பொய்யாகச் சேர்க்கப்பட்டதாகத் தெரிவித்தார், ரமேஷ் குடவாலா தாக்கல் செய்துள்ள மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.விஷ்ணு, சூரி நண்பர்களுக்கிடையேயான இந்த மோதல் தகராறு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு விஷால் மற்றும் சூரி ஆகியோர் இது வரை ஏழு படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர், அவர்கள் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்தனர். பிரச்சனைகள் தீர்ந்து இருவரும் படத்தில் மீண்டும் இணைந்து நடிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை