பிரபல ஹீரோ படத்திலிருந்து துப்பாக்கி இயக்குனர் விலகல்?

ARMurgadas opt out Vijay film?

by Chandru, Oct 24, 2020, 17:15 PM IST

விஜய் நடித்த துப்பாக்கி படத்தை இயக்கினார் ஏ.ஆர். முருகதாஸ் அப்படம் வரவேற்பைப் பெற்றது. மீண்டும் சர்க்கார் படத்தில் இணைந்தனர். அதன் பிறகு விஜய், இயக்குனர் அட்லீ படத்தில் நடித்தார். முருகதாஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தை இயக்கினார். பிகில் படத்தில் நடித்த பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்தார் விஜய் . இப்படம் முடிந்து திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. மாஸ்டர் படத்தை முடித்த விஜய் அடுத்து மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகப் பேச்சு எழுந்தது. அதுபற்றி முருகதாஸும் தெரிவித்திருந்தார்.

ஆனால் சம்பள விவகாரம், கதை விவகாரத்தில் பிரச்சனை எழுந்தது. அதில் சமரசம் ஏற்படாததால் இப்படத்தின் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் பல சுற்றுப் பேச்சு நடந்ததில் முருகதாஸ் கதையில் மாற்றம் செய்ய முடியாது என்றதால் படம் உருவாவதில் முன்னேற்றம் ஏற்படவில்லை இந்நிலையில் முருகதாஸ் விஜய் படத்திலிருந்து விலகி விட்டதாக இணைய தளங்களில் தகவல் வெளிவருகிறது. இது விஜய் ரசிகர்களை ஷாக்கில் ஆழ்த்தி இருக்கிறது.முருகதாஸ் விஜய் படத்திலிருந்து விலகியது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. விஜய்யும் புதிய படம் எதிலும் நடிக்க ஒப்புக் கொள்ளாமலிருக்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை