நயன்தாரா முதன்முறையாக அம்மன் வேடத்தில் நடித்திருக்கும் படம் மூக்குத்தி அம்மன். 15 வருடத்துக்கு பிறகு பக்தி படம் வருகிறது என்று எதிர் பார்த்திருந்தனர். இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார்.
இப்படம் வரும் தீபாவளி தினத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் விஐபியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. பக்தி படம் என்று ஆவலுடன் பார்த்தால் எடுத்த எடுப்பிலே அரசியல் தோலுரிப்பு வசனம் காதை தீட்ட வைக்கிறது. நான் நோன்பு கஞ்சியை குடிப்பேன் ஒருபோதும் ஆடி மாத கூழ் குடிக்க மாட்டேன் என்று ட்ரெய்லர் தொடங்குகிறது. அடுத்து வசனம் பேசும் நயன்தாரா, கடவுள் இல்லன்னு சொல்றவன நம்பிடலாம் ஆன ஒரு கடவுள உசத்தி இன்னொரு கடவுளே திட்றவன் ரொம்ப டேஞ்சர் என்று எச்சரிக்கை தருகிறார். நான் எதுக்கு வந்தேன்னு நெனக்கற என்றபடி ஒர் சாமியாரை காட்டுகிறார் நயன்தாரா. அந்த சாமியார் தீப ஆராதனை எடுத்து மக்களுக்கு உயர்த்தி காட்டுகிறார். பிறகு பக்தர்கள் அந்த சாமியார் முன் மண்டியிட்டு ஆசி பெறுகின்றனர்.
சாமியாருடன் கைகோர்த்து நடனம் ஆடும் பெண் என காட்சி செல்கிறது. உடனே நயன்தாரா, இவங்கள பொறுத்தவரைக்கும் இவங்க தான் கடவுள் இவ்வளவுதான் பக்தி என நய்யாண்டி செய்கிறார். பிறகு அந்த சாமியார் தமிழ் நாட்ல மட்டும் மதத்தின் பேர சொல்லி இடத்தை பிடிக்க முடியல எனச் சொல்லிவிட்டு அடுத்த ஐந்து வருஷத்துல பிடிச்சி காட்றேன் என்று சவால் விடுகிறார். அதை கேட்ட நயன்தாரா, பாக்கலாம் என்ன பண்றான்னு பாக்க லாம் என்று பதில் சவால் விடுகிறார். மூக்குத்தி அம்மன் வேடத்தில் நடிக்கும் நயன்தாரா அதிரடி அரசியல் பேசி இருக்கிறார். அவர் பேசி இருக்கும் அரசியல் பூகம்பமாக வெடிக்குமா என்பது போகப்போக தெரியும்.