சூர்யா படம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு.. டிரெண்டிங்கில் இடம் பிடித்த டிரெய்லர்..

Suriya Movie Release On 12 November

by Chandru, Oct 26, 2020, 16:25 PM IST

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படம் சூரரைப் போற்று. ஜிவி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். அக்டோபர் 30 ம் தேதி அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் படம் வெளியிட என் ஓ சி (நோ அப்ஜெக்‌ஷன்) பிரச்சனைகளால் பட ரிலீஸ் தள்ளி வைப்பதாக சூர்யா தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்களும் படம் வெளியாகாதோ என்று ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து சூர்யா கூறும் போது, 'சூரரைப் போற்று பிரம்மாண்ட அனுபவத்தை வார்த்தைகளால் விளக்கி விட முடியாது. படத்தில் விமானப் படை சார்ந்த காட்சிகள் வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் அது சம்பந்தமாக ஏராளமான நடை முறைகளும் அனுமதிகளும் பெற வேண்டியிருந்தது.

இப்படம் தேசியப் பாதுகாப்பு பற்றிப் பேசுவதால் அது சம்பந்தமாக இந்திய விமானப்படையுடன் நாங்கள் தொடர்பு கொண்டு அணுகி அவர்களது ஒத்துழைப்பையும் பெற வேண்டி இருந்தது. படம் வெளியிடுவதற்கு முன் அவர்களிடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டி இருப்பதால் பட வெளியீடு சற்றுத் தாமதம் ஆகிறது. இது வழக்கமான நடைமுறை தான் வேறொன்றுமில்லைகவலை வேண்டாம் என்றார்.இந்நிலையில் சூரரைப் போற்று படத்துக்கு என் ஓ சி கிடைத்து விட்டதாக மறு நாளே படத் தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் அறிவித்தார். இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் சூரரைப் போற்று படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது. அதில் சூர்யாவின் ஆக்ரோஷமான நடிப்பும் துடிப்பான வசனங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.ஏர் உழுபவனும் விமானத்தில் பறப்பான், விமான டிக்கெட் விலை 1 ரூபாய் என சூர்யா பேசும் அதிரடி வசனங்கள். அவரை விமான நிறுவனம் தொடங்கவிடாமல் தடுக்கும் அதிகார வர்க்கம் என ட்ரெய்லர் பரபரக்கிறது, விமான தரையிறங்கு அனுமதிக்காத போது சாலையில் விமானத்தை இறக்கும் தடாலடி என சூர்யாவின் அசத்தலான காட்சிகளுடன் டிரெய்லர் தூள் கிளப்புகிறது. நவம்பர் 12ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது என சூர்யா அறிவித்திருக்கிறார். தீபாவளிக்கு முந்தியே படம் ரிலீஸ் ஆகிறது. ஒடிடியில் படம் வெளியானாலும் சூர்யா ரசிகர்கள் அன்றைய தினம் பட்டாசு வெடிக்கத் தயாராகி வருகிறார்கள்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை