ஒரு ஸ்பூன் ஐஸ்கிரீமிற்காக குழந்தையுடன் போராடும் நடிகர்..

by Chandru, Oct 28, 2020, 10:10 AM IST

ரஜினி, விஜய் அஜீத், சூர்யா, கார்த்தி போன்றவர்களின் படங்கள் பிறமொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. அதுபோல் பிற மொழிப்படங்கள் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்படுகிறது. அப்படி வெளிவந்த பாகு பலி படம் பெரிய வசூல் சாதனை படைத்தது. அதேபோல் கன்னடத்தில் யஷ் நடிப்பில் உருவான கே ஜி எப் படம் தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது.

தற்போது இப்படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இதில் ஸ்ரீநிதி செட்டி, ரவீனா டாண்டன், சஞ்சய் தத் போன்ற நடிகர்கள் நடிக்கிறார்கள்.இதற்கிடையில் யஷ், ராதிகா பண்டிட் நட்சத்திர தம்பதிக்குக் கடந்த 2018 ஆண்டு பெண் குழந்தையும், கடந்த 2019ம் ஆண்டு ஆண் குழந்தையும் பிறந்தது.

கொரோனா ஊரடங்கால் கே ஜி எப்2 படம் தடைப்பட்டிருப்பதால் யஷ் தனது குழந்தைகளுடன் விளையாடி அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் மகள் ஐஸ்கிரீமை ஸ்பூனில் எடுத்துச் சுவைக்க அருகில் அமர்ந்து ரசிக்கும் யஷ் தனக்கும் ஒரு ஸ்பூன் தரும்படி கெஞ்சுகிறார். ஆனால் குழந்தை ஐஸ் கிரீமை யஷுக்கு ஊட்டுவதுபோல் பாவனை காட்டிவிட்டு ஏமாற்றுகிறது. கடைசியில் யஷுக்கு ஊட்ட ஸ்பூனை அவர் வாய் அருகில் எடுத்துச் செல்லும்போது, வேண்டாம் நீ சாப்பிடு என்கிறார். இந்த காட்சியை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவருக்கும் ஸ்பூனில் ஐஸ்கிரீம் எடுத்துக் காட்டி, மாமா சாப்பிடுங்க என்கிறது குழந்தை. ருசிகரமான இந்த வீடியோ காட்சி நெட்டில் வைரலாகி வருகிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை