Saturday, Mar 6, 2021

பிரபல நடிகருக்கு இத்தாலி ஷூட்டிங்கில் பிரச்சனை.. மூட்டை கட்டிக்கொண்டு திரும்புகிறது..

by Chandru Oct 30, 2020, 12:15 PM IST

பிரபல நடிகர், பாகுபலி ஹீரோ பிரபாஸ் இப்படத்துக்குப் பிறகு சஹோ படத்தில் நடித்தார். பெரும் பொருட்செலவில் எடுத்தபோதும் அப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை இதனால் அப்செட் ஆன ஹீரோ அடுத்த படம் வெற்றிப்படமாக வேண்டும் என்று காத்திருந்தார், தற்போது ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் டைரக்டு செய்கிறார். பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

பிரபாஸ் பிறந்தநாளன்று ராதே ஷ்யாம் படத்திலிருந்து அசத்தலான ஸ்பெஷல் மோஷன் வீடியோவை வெளியிட்டது படக்குழு. அதற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. ராதே ஷ்யாம் திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே சினிமா துறையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் பூஜா, பிரபாஸ் கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. படத்தில் பிரபாஸின் புத்துணர்வு தரும் தோற்றம் ரசிகர்களைச் சுண்டி இழுத்துப் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. மோஷன் போஸ்டர் எழில் மிகுந்த அழகியல் ததும்பும் அடர்ந்த வனத்தின் ஊடே செல்லும் ரயில் பாதையில் சீறிப் பாயும் ரயிலைக் காட்சிப்படுத்தி அந்த மோஷன் வீடியோ தொடங்குகிறது. அப்படியே விரியும் காட்சிகள் அந்த ரயிலின் வெவ்வேறு பெட்டியில் பயணிக்கும் விக்ரமாதித்யா (பிரபாஸ்), பிரேரனாவின்(பூஜா ஹெக்டே) மீது படர்கிறது. இருவரும் வெவ்வேறு கலாச்சாரத்தைச் சார்ந்தவர்கள். வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

விக்ரமாதித்யா (பிரபாஸ்), பிரேரனாவின் (பூஜா ஹெக்டே) அறிமுகக் காட்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், ராதே ஷ்யாம், ஐரோப்பாவில் நடைபெறும் ஒரு மகத்தான காதல் காவியமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
படத்தில், சச்சின் கேடேகர், பாக்யஸ்ரீ, பிரியதர்ஷி, முரளி ஷர்மா, சாஷா சேத்ரி, குனால் ராய் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் படம் வெளியிடப்படுகிறது. படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்குகிறார். வம்சி மற்றும் பிரமோத் யுவி கிரியேஷன்ஸ் பேனரில் தயாரிக்கின்றனர். வம்ஸி மற்றும் பிரமோத் புரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிக்கிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்கிறார். கோத்தகிரி வெங்கடேஷ்வர ராவ் எடிட்டிங் செய்கிறார். நிக் போவெல் சண்டைக் காட்சிகள் அமைக்கிறார்.கொரோனா ஊரடங்கிற்கு முன்பு வெளிநாடு சென்ற ராதே ஷ்யாம் படக் குழு கொரோனா பிரச்சனையால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் படக்குழு இந்தியா திரும்பியது. 6 மாத இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் இப்படக் குழு இத்தாலி புறப்பட்டு சென்று படுவேகமாக படப்பிடிப்பு தொடங்கியது. பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன்.

பெரிய ஹீரோ பிரபாஸ் கொரோனா காலகட்டத்திலும் இத்தாலி படப்பிடிப்புக்குச் சென்றதைப் பார்த்த மற்றவர்களும் வெளிநாட்டு ஷூட்டிங்கிற்கு புறப்பட்டனர். நடிகர் நவீன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரங் தே படப்பிடிப்பிற்காக ஒட்டு மொத்த படக் குழுவுடன் இத்தாலி சென்றது. ஆனால் படப்பிடிப்பு நடந்த அந்நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் தொடங்கியது. பிரபாஸ் படக் குழுவுக்கும் இதே பிரச்சினை. இதனால் திட்டமிட்டபடி படக் குழுவால் படப்பிடிப்பை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து நிதின் அப்படக்குழு ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு இந்தியா புறப்பட்டது. இந்தியாவிலேயே படப் பிடிப்பை நடத்த தகுந்த லொகேஷனை படக் குழு தேடி வருகிறது.

பிரபாஸ் நடித்து வரும் படத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாகத் தினம் தினம் சிக்கல் ஏற்படுகிறது. நினைத்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. ஒவ்வொரு காட்சியையும் படமாக்கப் போருக்குப் போவது போல் போராடி பர்மிஷன் பெற வேண்டு உள்ளது. இதனால் ஷூடிங்கில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து பிரபாஸ் பட டீமும் ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு இந்திய திரும்ப முடிவு செய்துள்ளது. மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு சில நாட்களில் அவர்களும் திரும்புகின்றனர் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You'r reading பிரபல நடிகருக்கு இத்தாலி ஷூட்டிங்கில் பிரச்சனை.. மூட்டை கட்டிக்கொண்டு திரும்புகிறது.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

அதிகம் படித்தவை