நடிகர் கமல்ஹாசன் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். தினம் தினம் தமிழக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி வரும் அவர் மத்திய அரசிடமும் கொரோனா காலத்தில் மக்கள் பட்ட அவதிகளை எடுத்துச் சொல்லி நிவாரணம் வழங்கக் கேட்டார். 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அதில் தனது கவனத்தைத் திருப்பி இருக்கிறார்.
தமிழ் நாடு முழுவதும் தீவிர அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறார். அதற்காக பிரத்யேக வசதிகளுடன் கூடிய சிவப்பு நிற வேன் தயார் செய்திருக்கிறார்.கடந்த மாதம் மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. அதில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கமல்ஹாசன் தலைமை தாங்கினார்.
அப்போது, வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைப்பதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது பற்றி முடிவை கட்சி தலைவர் கமல்ஹாசன் எடுக்க அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில் இன்று மநீம கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடந்தது. அதில் பேசிய கமல்ஹாசன். திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.கமல்ஹாசன் தற்போது ஒன்றல்ல இரண்டல்ல மூன்று தளங்களில் தனது பயணத்தைச் செலுத்தி வருகிறார். ஒரு பக்கம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பைச் சமீபத்தில் வெளியிட்டார்.
இதற்காக பிரத்யேக புகைப்பட செஷனில் ஈடுபட்டார். அடுத்து விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன்4 நடத்தி வருகிறார். மூன்றாவதாக மக்கள் நீதி மய்யம் கட்சிப் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார். இந்நிலையில் தான் தமிழ்நாடு முழுவதும் தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்திக்க திட்டமிட்டிருக்கிறார்.தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள கமலுக்காக சிவப்பு நிறத்தில் பிரச்சார வேன் தயார் செய்யப்பட்டிருக்கிறது.கமலின் இந்த சுறுசுறுப்பான செயல்பாடுகளைக் கண்டு அவரது ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் உற்சாகம் அடைந்திருக்கின்றனர்.