சிம்பு உடலை குறைத்தார், தனுஷ் உடலை ஏற்றுகிறார்.. போட்டி ஆரம்பம்..

by Chandru, Nov 3, 2020, 10:24 AM IST

சினிமாவில் போட்டி நடிகர்கள் எப்போதும் இருவர் இருந்து வருகின்றனர். ரஜினி -கமல்,விஜயகாந்த் -சரத்குமார். விஜய்- அஜீத், சிம்பு-தனுஷ், விஷால்- ஆர்யா இப்படி ஒரு பட்டியல் போடலாம். என்ன தான் சினிமாவில் போட்டியாளர்களாக இருந்தாலும் நிஜத்தில் நடப்புடன் இருக்கின்றனர்.சிம்பு, தனுஷ் போட்டி சில காலம் அடங்கி இருந்தது தற்போது மீண்டும் துளிர் விடுகிறது. கடந்த ஒன்றரை வருடமாக நடிக்காமலிருந்து வந்த சிம்பு தற்போது மளமளவென படங்களில் நடிக்க ஒப்புக்கொள்கிறார்.

சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் படப்பிடிப்பில் கடந்த மாதம் கலந்துகொண்டார். கையில் நாக பாம்பைச் சிம்பு போஸ் கொடுத்திருந்த ஃபர்ஸ்ட் லுக் ஸ்டில்கள் வெளியாகி பரபரப்பானது. மேலும் சிம்பு உடற் பயிற்சி செய்யும் வீடியோக்கள் ஸ்லிம் தோற்ற ஸ்டில்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

சுசீந்திரன் படப்பிடிப்பைக் கிட்டத் தட்ட முடித்து விட்டார் சிம்பு. விரைவில் டப்பிங் செய்யத் தொடங்க உள்ளார். இப்படம் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகிறது. இதற்கிடையில் அடுத்த படமான வெங்கட் பிரபுவின் மாநாடு படப்பிடிப்பில் பங்கேற்று டிசம்பரில் அதனை முடித்துத் தரத் திட்டமிட்டிருக்கிறார் .கடந்த இரண்டு வருடமாக வெயிட் போட்ட தோற்றத்தில் இருந்து வந்த சிம்பு தற்போது உடம்பை குறைத்த நிலையில் தனுஷ் தனது உடல் எடையைக் கூட்டி கட்டுமஸ்த்து தோற்றத்துக்கு மாறுகிறார், தனுஷ் நடிக்கும் D36 படத்தை கார்த்தி நரேன் இயக்குகிறார்.

இப்படத்துக்காக தனுஷ் உடலில் வெயிட் போடுகிறார். அதற்கான பயிற்சியைத் தொடங்கி இருக்கிறார். அவருடன் பட இயக்குனர் கார்த்திக் நரேனும் தினமும் செல்கிறார். ஜீவி பிரகாஷும் தனுஷுடன் உடற்பயிற்சி செய்கிறார். அந்த ஸ்டில்லை தனது இணைய தள பக்கத்தில் பிரகாஷ் வெளியிட்டிருக்கிறார். தற்போது கார்த்திக் நரேன் படத்தில் நடிக்கும் தனுஷ் அடுத்து மித்ரன் ஜவகர் இயக்கத்தில் நடிக்கிறார். இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனிருத் இசையில் இணைகிறார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.கொரோனா ஊரடங்கிற்கு தனுஷ் இந்தி படப்பிடிப்பில் சில வாரங்களுக்கு முன் பங்கேற்றார். அப்போது அவர் கேமராவை பிடித்து முத்தம் கொடுத்தார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை