சர்ச்சை நடிகைக்கும் தங்கைக்கும் போலீஸ் சம்மன்... 10ம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்..

by Chandru, Nov 3, 2020, 18:16 PM IST

நடிகை கங்கனா ரானவத் ஒரு பக்கம் சினிமாவில் நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் சர்ச்சைகளில் சிக்கியும் அதிரடியாகக் கருத்துக்கள் சொல்லி அரசியல்வாதிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்து வருவதுடன் பாலிவுட்டில் போதை மருந்து பயன்படுத்துவாக கூறி பாலிவுட் பெரும் புள்ளிகளின் எதிர்ப்பையும் சம்பத்திருக்கிறர்.

சமீபத்தில் கங்கனா ரனாவத், பாரிஸில் மதத்தின் வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடி பெயரில் தலை துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திக்குப் பதிலளிப்பதற்காக ட்விட்டரில் மெசேஜ் வெளியிட்டர். “இந்துக்களின் உயிர் ஒரு பொருட்டல்ல, மேற்கத்திய நாட்டில் இந்த தேதி வரை மில்லியன் யூதர்களின் இனப்படுகொலை திரைப் படங்களை உருவாக்குகின்றனர்.நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் அடிமைத்தனத்தின் மூலம் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர் என்பது நமக்குத் தெரியுமா? இந்து இனப் படுகொலை பற்றிய திரைப் படங்கள் எதுவும் இல்லை.

ஒரு மதத்தை விமர்சிப்பதும், ஆய்வு செய்வதும் மிகவும் சகிப்புத்தன்மை அற்றது. முற்றிலும் ஆண் மேலாதிக்கம் பெண்கள், விலங்குகள், தாவரங்கள் அல்லது சுற்றுச் சூழலை வணங்குவதில்லை, இன்றைய காலங்களில் இது வேகமாக வளர்ந்து வரும் மதமாகும், மேலும் அறிவு ஜீவிகளால் பாதுகாக்கப்படுகிறது. ஒரு கேலிச்சித்திரத்திற்காக ஒரு ஆசிரியர் தலை துண்டிக்கப்படுகிறார், படையெடுப்பின் போது அந்த படையெடுப்பார்கள் நம் மக்களுக்கு என்ன செய்திருக்க வேண்டும் என்பதை மட்டுமே நாம் கற்பனை செய்து பார்க்க முடியும். அமைதியான மதம் சகிப்பின்மை என்று இந்துக்கள் காட்டியிருந்தால், பாலிவுட் முழுவதும் நீண்ட காலத்திற்கு முன்பே தலை துண்டிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் எங்கள் மதத்தை இழிவுபடுத்தும் படங்களைத் தயாரிக்கிறார்கள், பின்னர் அவர்கள் காவிக்குப் பயப்படுவதாகக் கூறுகிறார்கள். பிரச்சாரத்தைப் பாருங்கள், அது அபத்தமானது மற்றும் ஊமை தர்க்கம்."
எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மெசேஜை தொடர்ந்து அவர் கங்கனா மற்றும் அவரது தங்கை ரங்கோலி மீது மதவாதத்தைத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யவைத்தது மத ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் கங்கனாவும் அவரது சகோதரியும் கருத்து தெரிவித்திருக்கின்றனர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மும்பையில் உள்ள பாந்திரா மாஜிஸ்திரேட் மெட்ரோபொலிட்டன் நீதிமன்றத்தில் ஷகில் அஷ்ரப் அலிசயத் என்பவர் புகார் மனு அளித்தார்.மனுவை விசாரித்த நீதிமன்றம் கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப் பதிவு செய்யக் காவல் துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, மத ஒற்றுமையை சீர்குலைத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக இந்தியத் தண்டனை சட்டப்பிரிவு 124 ஏ, 153 ஏ, 295 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சந்தல் ஆகிய 2 பேர் மீதும் பாந்திரா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஆகிய இருவரும் வரும் 10-ம் தேதிக்குள் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் மும்பை போலீஸ் தற்போது சம்மன் அனுப்பியுள்ளது.

You'r reading சர்ச்சை நடிகைக்கும் தங்கைக்கும் போலீஸ் சம்மன்... 10ம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை