பிக்பாஸ் நடிகை வழக்கில் நடிகர் சிக்குகிறார்.. விசாரணை விவரம் அளிக்க கோர்ட் ஆர்டர்..

Advertisement

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் தமிழ்த் திரை உலகிற்கு அறிமுகம் ஆனவர் இலங்கையைச் சேர்ந்த தர்ஷன். . பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு நடிகை சனம் ஷெட்டியை காதலித்து வந்திருக்கிறார். இருவருக்கும் திருமணம் கூட நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தர்ஷன் தன்னை காதலித்து ஏமாற்றியதாக சனம் ஷெட்டி போலீசில் அளித்த புகாரை ஏற்று பிக்பாஸ் நடிகர் தர்ஷன் மீது பெண் வன்கொடுமை சட்டம், மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் தர்ஷன் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு கூட ஏற்பட்டது ஆனால் அந்த பிரச்சனை அப்படியே நீடித்தது.

இந்நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி முடிந்த பின்னர் தர்ஷனும், சனம் ஷெட்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் பிரிந்துவிட்டார்கள். இதனால் வருத்தம் அடைந்த சனம் ஷெட்டி தனக்கும், தர்ஷனுக்கும் நடந்த நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்நிலையில் அடையாறு போலீசில் தர்ஷன் மீது நான் கொடுத்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் சனம் ஷெட்டி.கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ மூலம் புகழ் பெற்ற தர்ஷன் என்னை மெல்ல ஓரங்கட்டினார், சமூக வலைத் தளங்களில் என்னை பற்றி அவதூறு பரப்பினார்.

திருமணம் செய்வதாகக் கூறி பழகி நிச்சாயதர்தம் செய்தார். பிறகு திருமணம் செய்யாமல் ஏமார்றிவிட்டார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சனம். இந்த வழக்கு, நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது, ​​விசாரணை அறிக்கையையும் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் நீதிமன்றத்தின் முன் மூன்று வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு அடையார் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் 4 ஷோவில் போட்டியாளராக பங்கேற்றிருக்கிறார் சனம். பிக்பாஸ் வீட்டில் அவர் தினம் ஒரு கட்சிக்குத் தாவிக் கொண்டிருந்த நிலையில் போட்டியிலிருந்து வெளியேறுவதாக முதல் வாரத்திலேயே தேர்வு செய்யப்பட்டார் சனம். ஆனால் அதிலிருந்து தப்பினார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>