கமல் நடிக்கும் புதிய பட தலைப்பு அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான டைட்டில்..

by Chandru, Nov 7, 2020, 17:53 PM IST

உலக நாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் படம் கமல்ஹாசன் 232. லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் கமல்ஹாசன் வெளியிட்டார். ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படம் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.இப்படம் பற்றிய டைட்டில் அறிவிப்பு பற்றி ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் கூறும்போது,உலக நாயகன்‌ பத்மபூஷன்‌ கமல்‌ஹாசனின்‌ 66வது பிறந்த நாள்‌ (நவம்பர்‌ 7, 2020) கொண்டாடப்படுகிறது. இந்நாளில்‌ ராஜ்கமல்‌ பிலிம்ஸ்‌ இண்டர் நேஷனல்‌ மிகுந்த பெருமையுடன்‌ வழங்கும்‌ கமல்ஹாசனின்‌ 'KH 232' படத்தின்‌ பெயர்‌ வெளியிடப்படுகிறது.

இந்த கொள்ளை நோய்‌ காலத்திலும்‌ இயக்குனர்‌ லோகேஷ்‌ கனகராஜ்‌ மற்றும்‌ குழுவினர்‌ உலக நாயகனுடன்‌ சேர்ந்து படத்தின்‌ பெயர்‌ வெளியிடுவதற்கான டீஸரை உருவாக்‌கியுள்ளனர்‌. இந்த கோவிட்‌-19 காலத்தின்‌ “புதிய இயல்பில்‌” படம்‌ எடுப்பதற்கு அரசாங்கம்‌ அறிவித்த அனைத்து வழிமுறைகளையும்‌ ராஜ் கமல்‌ தயாரிப்பு குழு சரியாகப் பின்பற்றும்‌. மேலும்‌ கூடுதல்‌ தகவல்கள்‌ வரலாற்றுப் பாரம்பரியம்‌ கொண்ட ராஜ் கமல்‌ தயாரிப்பு நிறுவனம்‌ சார்பில்‌ வழங்கப்படும்‌.

உலகநாயகனுக்காக உங்களின்‌ அன்பான வாழ்த்துகளை வேண்டுவதுடன்‌ கமல்ஹாசன் 232. எனத் தலைப்பில்‌ கொண்டாட அழைக்‌கிறோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சரியாக இன்று மாலை 5 மணிக்குக் கமல் நடித்த டீஸருடன் டைட்டில் வெளியிடப்பட்டது. கமல் 232 படத்துக்கு விக்ரம் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.கமல்ஹசன் நடிப்பில் இதற்காக பிரத்யேகமான டீஸரை லோகேஷ் உருவாக்கினார். தனி அறையில் நவீனத் துப்பாக்கிகளை ஜன்னலிலும் மற்ற இடங்களிலும் மறைத்து வைத்து விட்டு விருந்துக்கு அழைத்தவர்களுக்குத் தலை வாழை இலையில் விருந்து பரிமாறுகிறார் கமல்.

அடுத்து என்ன செய்வாரோ என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது திடீரென்று கத்திகளை வீசி விக்ரம் எனப் பட டைட்டிலை அறிவிக்கிறார்.விக்ரம் என்ற டைட்டில் ரசிகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானதுதான். 1986ம் ஆண்டு கமல்ஹாசன் சந்திர ஹாசன் இணைந்து இந்த படத்தைத் தயாரித்திருந்தனர். ராக்கெட்டை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை