பேயை காதலிக்கும் யோகிபாபு.. ஒத்தை ரோஜாவுடன் பின்னால் சுற்றுகிறார்..

by Chandru, Nov 10, 2020, 18:25 PM IST

படத்திற்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்து நடிப்பில் முழுதாக தன்னை மாற்றி, எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி, உலகளவில் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் நடிகை அஞ்சலி. அதேபோல் யோகிபாபுவும் படத்துக்குப் படம் மாறுபடுகிறார். அவர்கள் இருவரது நடிப்பில் வெளிவரவுள்ளது “பூச்சாண்டி”. இதன் ஃபர்ஸ்ட் லுக்கில் பேயாக வரும் அஞ்சலியைக் காதலிக்க யோகிபாபு கையில் ஒத்த ரோஜாவை வைத்துக்கொண்டு அலைகிறார்.

தி சோல்ஹ்ஜர்ஸ் ஃபேக்டரி (The Soldiers Factory) நிறுவனத்தின் சார்பில் கே.எஸ் சினீஷ் தயாரிக்க, கிருஷ்ணன் ஜெயராஜ் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் இப்படம் கண்டிப்பாகப் குழந்தைகள் கொண்டாடும் அட்டகாசமான கமர்ஷியல் படமாக இருக்கும் என்பதை ஆருடம் சொல்வதாக அமைந்திருக்கிறது.

படம் குறித்து இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ் கூறியதாவது:“பூச்சாண்டி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் அபார வரவேற்பு, மனதிற்கு பெரும் சந்தோஷத்தை தந்திருக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாகக் கொண்டு, வேடிக்கைகள் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் அஞ்சலி தனது அற்புதமான நடிப்பால், படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு அஞ்சலி கண்டிப்பாகக் குழந்தைகள் விரும்பும் நாயகி யாக மாறிவிடுவார். அஞ்சலி யும், யோகிபாபுவும் பேயாக நடித்துள்ள பகுதிகளை, குழந்தைகள் 100 சதவீதம் வயிறு வலிக்க சிரித்து மகிழ்ந்து கொண்டாடுவார்கள். மேலும் விஜய் டீவி புகழ் ராமர் ஒரு முக்கிய பாத்திரத்தில் வந்து, படத்தின் காமெடிக்கு மேலும் வலு சேர்த்துள்ளார்.

படத்தின் 95 % படப்பிடிப்பு முடிக்கப்பட்டுவிட்டது. மீதமிருக்கும் காட்சிகளும் விரைவில் முடிக்கப்பட்டுவிடும். விரைவில் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு பற்றிய அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். “பூச்சாண்டி” திரைப்படம் உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியிடப்படும்.இப்படத்துக்கு விஷால் சந்திர சேகர் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு ஆர்வி & மருத நாயகம். கலை சக்தி வெங்கட் ராஜ்.பாடல்கள் கு. கார்த்திக். காதல் வேந்தன். நடன அமைப்பு ஷெரீஃப் , நந்தா. சண்டைப்பயிற்சி சில்வா. உடைகள் சண்முக பிரியா தினேஷ்.. புரடக்‌ஷன் எக்ஸிக்யூட்டிவ் டி.. முருகேஷன். ஒலிக்கலவை -எம் சரத்குமார். விஷுவல் எபெக்ட்ஸ் DTM லவன் &குசன். எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் டி.. ஏழுமலையான்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை