ரஜினி ஸ்டைலில் அறிமுகமாகும் சிம்பு..

by Chandru, Nov 10, 2020, 18:05 PM IST

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் என்று ரஜினி வசனம் போல் ஒன்றரை வருடம் நடிக்காமல் கேப் விட்டு ரிஎன்ட்ரி தரும் நடிகர் சிம்புவின் வருகை திரையுலகினரை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.வெயிட் போட்டுவிட்டார், படப் பிடிப்புக்குத் தாமதமாக வருகிறார், படப்பிடிப்பு நீண்ட நாள் ஆகிறது என்று கடந்த சில மாதங்கள் வரை சிம்பு மீது திரையுலகில் சிலர் புகார் கூறி வந்தனர். அதெல்லாவற்றையும் ஈஸ்வரன் என்ற ஒரு படத்தின் மூலம் அடித்து உடைத்து சுக்கு நூறாக்கிவிட்டார். உடலை மெலிய வைத்து ஷாக் கொடுத்தார். 40 நாளில் முழு படப்பிடிப்பையும் முடித்து டப்பிங்கும் பேசி முடித்து அடுத்த படமான மாநாடு ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டார்.

சிம்புவை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அன்பாக அழைக்கிறார்கள், இப்போது, ​​'ஈஸ்வரன்' படத்தில் சிம்புவுக்கு ரஜினிகாந்த் வகையான அறிமுகக் காட்சி வைக்கப்பட்டிருப்பதாகச் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 'ஈஸ்வரன்' படத்தில் சிம்புவின் அறிமுகக் காட்சி கிரிக்கெட் போட்டியாக இருக்கும், அதாவது காலா படத்தில் ரஜினிகாந்தின் அறிமுகக் காட்சி அமைக்கப்பட்டது போல் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் சிம்புவின் அறிமுகக் காட்சியில் படத்தின் மோஷன் போஸ்டரில் இடம்பெற்ற அதே தீம் மியூசிக் இருக்கும்.சிம்புவின் சமீபத்திய விறுவிறுப்பான நடவடிக்கை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈஸ்வரன் படத்தின் டீஸர் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக வெளியிடப்பட உள்ளது.

மேலும் இந்த படம் பொங்கல் 2021க்கு வெளியிடப்பட உள்ளது. 'ஈஸ்வரன்' ஒரு கிராம பின்னணி கதை. பாசம், அன்பு, நகைச்சுவை மற்றும் ஆக்‌ஷன் கலந்த கலவையாக இருக்கும். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்கிறார். பாரதிராஜா, பாலா சரவணன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.இதற்கிடையில், வெங்கட் பிரபுவுடன் 'மாநாடு' என்ற அரசியல் த்ரில்லர் படத்திற்கான பணிகளைச் சிம்பு மீண்டும் தொடங்கினார், மேலும் படத்தின் படப் பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. சிம்பு 'மாநாடு படத்திற்காக வித்தியாசமான தோற்றத்துடன் நடித்து வருகிறார். மேலும் அவரது புதிய தோற்றத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை