தீபாவளிக்கு காமெடி மற்றும் அடல்ட் படம் ரிலீஸ்..

by Chandru, Nov 11, 2020, 10:11 AM IST

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவியதால் கடந்த 240 நாட்கள் பூட்டப்பட்ட தியேட்டர்கள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. புதிய படங்கள் ரிலீஸ் எதுவும் இல்லாததால் தியேட்டர் உரிமையாளர்கள் சூப்பர் ஹிட் தமிழ்ப் படங்களை ரீ ரிலீஸ் செய்து பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகளுக்குக் கொண்டு வர முயற்சித்தனர். அது பெரிதாகக் கைகொடுக்கவில்லை. தீபாவளிக்கு புதிய பட ரிலீஸ் திட்டமிடப்பட்டிருக்கிறது.

முன்னதாக தியேட்டர்களில் விபிஎப் கட்டணம் செலுத்தி புதிய படங்கள் ரிலீஸ் செய்ய மாட்டோம். அந்த கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்தால் தான் தியேட்டர்களில் படங்கள் ரிலீஸ் செய்வோம் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். இது சிக்கலை ஏற்படுத்தியது. தியேட்டர் அதிபர்கள், தயாரிப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் தீபாவளிக்குப் படங்கள் வெளியாகாது என்று கருதப்பட்டது.

இதற்கிடையில் விபிஎப் கட்டணத்தை சில வாரங்களுக்கு ரத்து செய்வதாக அறிவித்தது.இதையடுத்து அந்த காலகட்டத்தில் படங்களை ரிலீஸ் செய்யலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. இதையடுத்து சந்தானத்தின் 'பிஸ்கோத்' மற்றும் சந்தோஷ் பி ஜெயகுமாரின் 'இரண்டாம் குத்து' தீபாவளிக்குப் பெரிய திரைகளில் வெளியாகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அந்தந்த தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது.கவுதம் கார்த்திக் நடித்த 'இருட்டறையில் முரட்டுக் குத்து' படத்தின் தொடர்ச்சியாக 'இரண்டம் குத்து' படம் உருவாகி இருக்கிறது. மேலும் தணிக்கை குழுவில் இப்படத்துக்கு 'ஏ' சான்று வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்பு, சந்தானத்தின் 'பிஸ்கோத்' தணிக்கை குழுவிலிருந்து 'யு' பெற்றது. இப்போது, ​​இந்த தீபாவளியை வெளியிட இரண்டு படங்களும் முடிவாகி உள்ளன.

ஒருவழியாக 7 மாதத்துக்குப் பிறகு பெரிய திரைகளில் புதிய வெளியீட்டைக் காணப் போவதால், சினிமா ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் 'இரண்டாம் குத்து' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் இதில் டேனியல் அன்னி போப், மீனல், ஷா ரா, அக்ரிதி சிங் மற்றும் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் முன்பு வெளியிடப்பட்டது, இது சர்ச்சையைக் கிளப்பியது.

ஆர் கண்ணன் இயக்கிய சந்தானத்தின் 'பிஸ்கோத்' ஒரு காதல் நகைச்சுவைத் திரைப்படம், இதில் தாரா அலிஷா, சவுகார் ஜானகி, ஆனந்தராஜ், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த தீபாவளிக்கான வெளியீட்டிற்கு 'பிஸ்கோத்' மற்றும் 'இரண்டாம் குத்து' ஆகியவை தயாராகி வருவதால், தயாரிப்பாளர்கள் புதிய டிரெய்லரை வெளியிடுவார்கள் என்று இப்போது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தீபாவளிக்கு 3வது படமாக கோட்டா படம் வெளியாகிறது. இப்படத்தின் திரைக்கதையை மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் எழுதி இயக்கியுள்ளார் அமுதவாணன்.
ஜி தமிழ் ஜுனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் வின்னர் பவாஸ், அதே நிகழ்ச்சியின் மற்றொரு வின்னர் நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஆலன் செபாஸ்டின் மற்றும் எடிட்டிங் பொறுப்பை வினோத் ஸ்ரீதர் மிகச்சிறப்பாக செய்துள்ளனர். படத்தின் கதைபோலவே அதன் டெக்னிக்கல் டீமும் மிகச்சிறப்பாக களம் இறங்கியிருப்பதால் படம் கமர்சியலாகவும் தடம் பதிக்கும் என்பது உறுதி.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை