நியூ லுக்குடன் பிரபல இயக்குனர் படத்துக்கு வரும் சூர்யா..

by Chandru, Nov 11, 2020, 15:33 PM IST

சூரைப்போற்று படத்தில் நெருக்கமான சம்மர் கட்டிங் தலை அலங்காரத்துடன் காணப்படும் சூர்யா அதே தோற்றத்தில் ரசிகர்கள் மனதில் பதிந்திருந்தார். ஐபிஎல் மேட்ச் இறுதிப் போட்டி நடப்பதற்கு முன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி தமிழ் ஒளிபரப்பில் பேட்டி அளித்தார் சூர்யா. அப்போது அவரது புதிய தோற்றம் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இந்த புதிய ஹேர் ஸ்டைலில் எந்த படத்தில் நடிக்கிறார் என்று பரபரப்பானது.

சூரரைப்போற்று படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படம் பற்றி ஏற்கனவே தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், பாண்டி ராஜ் இயக்கும் படம் என நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இது குறித்து சூர்யாவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:லாக்டவுன் நேரத்தில் தலை முடியை வளர்த்தேன். என் ஹேர்ஸ் டைல் இயக்குனர் ஒருவருக்குப் பிடித்துவிட்டது.

இதையடுத்து லுக் டெஸ்ட் செய்தேன். கவுதம் மேனனுடனான என் அடுத்த படத்தில் இந்த ஹேர்ஸ்டைலில் தான் நடிக்கவிருக்கிறேன்.கவுதம் மேனன் படத்திற்காகத் தீபாவளி முடிந்ததும் 5 முதல் 10 நாட்கள் ஷூட்டிங்கில் பங்கேற்கிறேன். மேலும் இதே ஹேர்ஸ்டைலில் வேறு ஒரு இயக்குநரின் படத்திலும் நடிக்கிறேன் என்றார்.பாண்டி ராஜின் படத்தில் நடித்து முடித்த பிறகே சூர்யா வெற்றிமாறனின் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. முன்னதாக சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பின்னர் அந்த படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் சூரரைப் போற்று படத்தை ஒடிடிக்கு சூர்யா விற்றபோது ஹரி அவரை கண்டித்து அறிக்கை விட்டிருந்தார். சூர்யா நடிக்கவிருந்த அருவா படத்தில் தற்போது அருண் விஜய் நடிப்பார் என்று தெரிகிறது.

இதற்கிடையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் நாளை ஓடிடியில் வெளியாகவிருக்கிறது. ஏர் டெக்கன் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றிக் கூறிய சூர்யா, இப்படத்தில் நடித்த ஒவ்வொரு காட்சியின் அனுபவம் இதற்கு முன் ஏற்பட்டதில்லை. என்னை முற்றிலுமாக இயக்குனர் சுதா கொங்கரா மாற்றி இருக்கிறார். சீன்களில் சிரிக்கவே கூடாது என உத்தரவு போட்டார் என்றார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை