ஹீரோயின்கள் சம்பள பட்டியல் லீக்.. நெம்பர் ஒன் யார் தெரியுமா?

by Chandru, Nov 11, 2020, 15:29 PM IST

இந்த வருடத்தில் சினிமாவைப் பற்றி எங்குப் பேச ஆரம்பித்தாலும் கொரோனா ஊரடங்கு காலத்தைத் தவிர்த்து விட்டுப் பேச முடியாது. கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்கு பின் என சினிமா காலகட்டம் பிரிந்திருக்கிறது. கடந்த 7 மாதமாக புதிய படங்கள் எதுவும் இல்லாததால் பணப்புழக்கம் முற்றிலும் முடங்கிவிட்டது. எல்லா பிரச்சனைக்கும் முதலீடு பிரதானம். முதலீடு போடும் தயாரிப்பாளர்கள் நொந்து போய் இருக்கின்றனர். ஏற்கனவே தொடங்கப்பட்ட படங்களின் பட்ஜெட்டை குறைத்து மீண்டும் ஷூட்டிங் நடத்தி வருகிறார்கள். புதிய படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

கொரோனா காலகட்டத்தின் நஷ்டமான நிலையை உணர்ந்து விஜய் ஆண்டனி உள்ளிட்ட சில நடிகர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக்கொண்டிருக்கின்றனர். பட்ஜெட் தட்டுப்பாட்டால் இந்தியன் 2 படம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்காமல் இருக்கிறது.தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர், நடிகைகளை தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள கேட்டுக்கொண்டுள்ளனர். நடிகைகளின் சம்பளம் குறித்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்களது சம்பளம் புதியதாக நிர்ணயித்துத் தரப்பட்டுள்ளது.

நயன்தாரா ரூ. 4 கோடி சம்பளம் வாங்குகிறார். மார்க்கெட் நிலவரத்தைப் பொருத்து அவருக்கு அந்த சம்பளம் தரத் தயாரிப்பாளர்கள் முன்வருகின்றனர். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா அம்மனாக நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படம் தீபாவளி ஸ்பெஷலாக வரும் 14ம் தேதி ஓடிடியில் வெளியாகவிருக்கிறது. இப்படம் மூக்குத்தி அம்மன் மட்டும் தியேட்டர்களில் வெளியாகி இருந்தால் இந்த தீபாவளிக்கும் பெண்களின் கூட்டம் அலைமோதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பள விஷயத்தில் நயன்தாராவுக்கு அடுத்த இடத்தில் காஜல் அகர்வால் இருக்கிறார். அவருக்கு ரூ. 2 கோடி சம்பளம். த்ரிஷா, தமன்னா ஆகியோர் ரூ. 1.50 கோடியுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள். ரூ. 1 கோடி சம்பளத்துடன் ஸ்ருதிஹாசன் நான்காவது இடத்தில் இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷுக்கு ரூ. 80 லட்சமும், அஞ்சலிக்கு ரூ. 70 லட்சமும், நிவேதா பெத்து ராஜ், ஐஸ்வர்யா ராஜோஷுக்கு ரூ. 40 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.மேலும் மஞ்சிமா மோகனுக்கு ரூ. 35 லட்சமும், அனுபமா பரமேஷ்வரனுக்கு ரூ. 25 லட்சமும், ஷ்ரத்தா ஸ்ரீநாத் துக்கு ரூ. 10 லட்சமும் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நடிகைகளின் சம்பள பட்டியல் பார்த்து ரசிகர்கள் அசந்து போயிருக்கிறார்கள். ஹீரோயின்கள் சம்பளமே இத்தனை கோடிகளில் என்றால் ஹீரோக்களின் சம்பளத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை