இயக்குனர் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகப்பெரிய படங்களில் ஒன்றாகும். ஊரடங்குக்கு பின்னர் இயக்குனர் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார், மேலும் படப்பிடிப்பின் சிறிய வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் நிரம்பியுள்ளன. ராஜமவுலியும் அவரது குழுவினரும் பசுமை இந்தியா சவாலைக் கையிலெடுத்தனர். ரீன் இந்தியா சவால் என்பது பிரபலங்கள் மரம் மரக்கன்றுளை நட்டு, தங்கள் நண்பர்களையும் மற்றவர்களையும் சவாலை ஏற்றுக்கொள்ளப் பரிந்துரைக்கும் ஒரு முயற்சியாகும். அவர்கள் தங்கள் ரசிகர்களுக்கும் மரக்கன்றுகளை நட்டு, நல்ல சூழலை உருவாக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்.
ராஜமவுலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் குழுவினர் அவர்கள் படத்தின் படப்பிடிப்பில் மரக்கன்றுகளை நடும் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். இது குறித்து ராஜமவுலி எனது அணியும் நானும் கிரீன் இந்தியா சவாலால் பரிந்துரைக்கப்பட்டுள்ளோம். அதைச் செய்கிறோம் என்றார்.இப்படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கோமரம் பீம் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஆலியா பட், அலிசன் டூடி, ஒலிவியா மோரிஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி அமைக்கிறார்.
ஆர் ஆர் ஆர் என்றதும் சமீபத்திய சர்ச்சையும் இணைந்தே வருகிறது. முஸ்லிம் அணிவது போல் தொப்பி அணிந்து ஜூனியர் என் டி ஆர் நடித்த டீசர் சமீபத்தில் வெளியானது. அதற்கு ஆதிவாசிகளும், பா ஜ வினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பிட்ட காட்சியை நீக்காவிட்டால் ராஜமவுலியை தாக்குவோம் என்று பாஜ தலைவர் ஒருவர் எச்சரித்தார். அதற்கு திரையுலகினர் கண்டனம் தெரிவித்தனர். எதிர்ப்புகளுக்கு பதில் அளிக்காமல் மவுனம் காக்கிறார் ராஜமவுலி. ஆனால் எல்லாக் கேள்விகளுக்குப் படம் பதில் சொல்லும் என்கின்றனர் படக் குழுவினர்.