கமலின் மருதநாயகம் விரைவில் மீண்டும் தொடங்கும்? நடிக்கப்போவது யார்?

by Chandru, Nov 11, 2020, 16:20 PM IST

கமல்ஹாசனின் கனவுத் திட்டமாக 1997 இல் தொடங்கப்பட்ட படம் 'மருதநாயகம்' என்பது அனைவரும் அறிந்ததே. இங்கிலாந்து நாட்டு இளவரசி இப்படத்தை சென்னையில் தொடங்கி வைத்தார். அடுத்தடுத்த சில வாரங்கள் வேகமாகப் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் நிதி நெருக்கடிகளால் பல ஆண்டுகளுக்கு முன்பு அப்படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டு அப்படியே பெட்டியில் முடங்கியது. கடந்த 2019ம் ஆண்டின் தொடக்கத்தில், கமல்ஹாசன் மீண்டும் இப்படத்தைத் தொடங்கும் எண்ணத்தை வெளிப்படுத்தினார். இதற்காகப் பெரிய நிறுவனங்களுடன் உற்சாகமாகப் பேச்சு வார்த்தை நடத்தினார்.

ஆனால் இந்த முறை படப்பிடிப்பை வித்தியாசமாகத் திட்டமிட வேண்டும் என்று முடிவு செய்தார். ​​சமீபத்திய சலசலப்பு என்னவென்றால், லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' படப்பிடிப்பைத் தொடங்கவுள்ள கமல்ஹாசன், தனது கனவுத் திட்டமான 'மருத நாயகம்' படத்தையும் மீண்டும் தொடங்குவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.கடந்த சில ஆண்டுகளாக கமல்ஹாசன் மீண்டும் மருத நாயகம் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறது.

ஆனால் இப்போது, ​​கமல்ஹாசன் இந்த திட்டத்தை மீண்டும் தொடங்குவார் என்று ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது. கமல் தற்போது அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதால், மக்களுக்குச் சேவை செய்ய விரும்புவதாலும், இந்த படத்தில் வேறொருவர் நடிக்கலாம் என்று உலக நாயகன் முன்பு கூறியிருந்தார். 'மருதநாயகம்' படத்தில் கமலுக்குப் பதிலாகச் சீயான் விக்ரம் கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடும் என்று யூகங்கள் உள்ளன.

முன்னதாக, கேன்ஸ் 2017 இல் சுந்தர் சி இன் சங்க மித்ராவுடன் காட்சிப்படுத்தப்பட்ட மருதநாயகத்தின் போஸ்டர் தான் கமல்ஹாசன் தனது கனவுத் திட்டத்தை மீண்டும் நடத்த உள்ளார் என்பதைக் கோடிட்டுக் காட்டியது 'மருதநாயகம்' என்பது 18 ஆம் நூற்றாண்டின் போர்வீரர் முகமது யூசுப் கானின் வாழ்க்கையைச் சுற்றியுள்ள கால படம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாகும் எனத் தெரிகிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை