கணவருடன் கடலில் குதித்த கதாநாயகி.. என்ன நடந்தது?

by Chandru, Nov 17, 2020, 10:53 AM IST

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் எண்ணற்ற படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால். அறிமுக காலத்தில் வாய்ப்புக்காகக் கஷ்டப்பட்டவர் நடிப்பு,நடன திறமையால் தனக்கென ஒரு இடம் பிடித்தார். கவர்ச்சி ஹீரோயினாக மட்டுமல்லாமல் ராஜமவுலியின் மஹதீரா ராஜவம்ச கதையில் இளவரசி வேடத்திலும் நடித்தார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். இதற்காக ஆக்‌ஷன் பயிற்சியும் பெற்றார்.

கடந்த மாதம் காஜல் அகர்வால் தனது 2 வருட காதலன், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவை குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த கையோடு அவர் ஷூட்டிங்கில் பங்கேற்க எண்ணியிருந்தார். ஆனால் படப்பிடிப்பு தள்ளிப்போனது இதையடுத்து மாலத்தீவிற்குக் கணவருடன் தேனிலவு சென்றார். கடந்த 1 வாரத்துக்கும் மேலாகத் தேனிலவை அனுபவித்து வரும் ஜோடி அடிக்கடி தங்களது ஜாலியான படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏக்கப்பெரு மூச்சு விட வைத்து வருகின்றனர்.

கணவருடன் சிறப்புச் சுற்றுலாத் தலங்களுக்கு ஜோடி போட்டுச் சென்று சினிமா பாணியில் உல்லாசமாக நடனம் ஆடி பொழுதைக் கழிக்கிறார். அத்துடன் தனது சாகசங்களையும் நிகழ்த்திக் காட்டி ரசிகர்களை அசரவைக்கிறார். நடிகை காஜல் கணவர் கவுதமுடன் நீச்சல் உடை அணிந்து ஆழ்கடலில் குதித்து டைவிங் செய்தார். கவுதமுடன் கைகோர்த்தபடி ஆழ்கடலில் நீந்தும் படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படங்களில், புதுமணத் தம்பதிகள் ஒன்றாக கைகளைப் பிடித்துக் கொண்டு நீந்துவதைக் காணலாம். கஜல் கருப்பு நீச்சலுடை அணிந்திருப்பதும், கவுதம் நீல நிற டிரங்குகளை அணிந்திருப்பதும் காணப்படுகின்றனர்.

இதுகுறித்து காஜல் கூறும் போது, "நான் கடலை நேசிக்கிறேன், நான் எப்போதும் நீல நிறத்தை விரும்புகிறேன், மிகவும் அமைதியான மற்றும் அமைதியான இடத்தில் இப்போது நீந்துகிறேன்" என்றார்.மற்றொரு மெசேஜில் "கடலுடன் தனியாக இருங்கள், ஏனென்றால் அங்கே இருப்பதை நீங்கள் உணராத கேள்விகளுக்கான பதில்களைக் காண்பீர்கள்!" என்றார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை