ஷூட்டிங் இல்லை என்ன பண்றது.. ஊர்சுற்றும் ஜோடிகள்..

by Chandru, Nov 17, 2020, 11:50 AM IST

கொரோனா ஊரடங்கிற்கு முன்பு வரை வீட்டில் தங்க நேரமில்லாமல் ஊர் ஊராக நடிகர், நடிகைகள் பறந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துக் கொண்டிருந்தனர். வந்தாலும் வந்தது ஊரடங்கு பறவைகள் போல் சுற்றித்திரிந்த நடிகைகள் சிறகு ஒடிந்ததுபோல் வீட்டுக்குள் விட்டில் பூச்சியாகச் சுழல வேண்டியதாகிவிட்டது. எவ்வளவு நாள்தான் இணைய தளத்தில் தங்களது பொழுது எப்படிக் கழிப்பது, படங்களை பதிவிடுவது ஒரு கட்டத்தில் அதுவும் போரடிக்கவே சமையல் செய்ய கற்றுக் கொண்டனர். குறிப்பாக சமந்தா பல்கலை நிபுணராகிவிட்டார். சத்துள்ள சமையல் செய்யப் பயிற்சி, காஸ்டியூம் டிசைன் பயிற்சி.

கிரியா யோகா பயிற்சி எனப் பல கலைகள் கற்றுத் தேர்ந்தார். சமையலையும், காஸ்டியூம் டிசைனையும் சேர்ந்து ஒரு நிறுவனமே தொடங்கிக் குட்டி தொழில் அதிபராகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார்.வீட்டில் போரடித்தால் உடனே கணவருடன் கைகோர்த்துக் கொண்டு பைக்கில் ஊர் சுற்றத் தொடங்கிவிடுகிறார் சமந்தா. இந்த முறை கொஞ்சம் ஓவராக போரடிக்கவே பெட்டி படுக்கையுடன் சைதன்யவை அழைத்துக் கொண்டு வெளியூருக்கு விமானத்தில் பறந்தார்.

இன்ப சுற்றுலா முடிந்து இருவரும் ஐதராபாத் விமான நிலையத்தில் ஜோடியாக ஸ்டைல் தோற்றத்துடன் வந்து இறங்கினார்கள். அவர்களை அங்கிருந்த புகைப்படக்காரர்கள் சூழ்ந்துகொண்டு புகைப் படம் எடுத்துத் தள்ளினார்கள். இதே விமான நிலையத்தில் தான் அடிக்கடி ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவும் டேட்டிங் சென்றுவிட்டு புகைப்படங்களில் சிக்கி வம்பில் இழுத்துவிடப்படுகிறார்கள்.படப்பிடிப்புகள் தொடங்கினாலும் பல நடிகர், நடிகைகளுக்கு கொரோனா பயம் காரணமாக ஷூட்டிங் செல்ல தயங்குகின்றனர். ஒரு சில முக்கிய படக் குழுவினரும் படப்பிடிப்பு தொடங்கினால் பாதிப்பு வருமோ என்று தயக்கம் காட்டுகின்றனர். சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல் ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார். இதில் நயந்தாரா, விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கின்றனர். அதற்கான அழைப்பிற்கு சமந்தா காத்திருக்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை