காமெடி நடிகர்கள் படத்துக்கு நாயகி தேடுகிறார்கள்..

by Chandru, Nov 17, 2020, 16:51 PM IST

ஒரு காமெடியன் இருந்தாலே சிரித்து வயிறு வலி வந்து விடும் புதிய படத்தில் இரண்டு காமெடியன்கள் இணைகின்றனர். அதுவும் முதலாளி, தொழிலாளியாக. அப்படத்துக்கு சலூன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் சிவா கடை முதலாளியாக நடிக்கத் தொழிலாளியாக யோகி பாபு நடிக்கிறார். முத்துக் குமரன் இயக்குகிறார்.'குற்றம் 23', 'தடம்' வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இந்தர்குமாரின் ரெதான் - தி சினிமா பீப்பிள் தயாரித்துள்ள படம் 'கொம்பு வச்ச சிங்கம்டா'. எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ளது.

இதனைத் தொடர்ந்து 'தர்ம பிரபு' வெற்றிப் படத்தை இயக்கிய முத்துக்குமாரன் இயக்கத்தில் புதிய நகைச்சுவை படத்தைப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறார் இந்தர்குமார்.'சலூன்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் சிவா - யோகி பாபு இணைந்து நடிக்க இரண்டு கதாநாயகிகளைப் படக் குழு தேடி வருகிறது. மற்று நட்சத்திரங் களின் தேர்வு நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க சரவெடி நகைச்சுவையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் துவங்கி கோடை விடுமுறையில் வெளிவருகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவு எஸ்.மணிகண்டன் செய்கிறார். இசை சாம்.சி.எஸ். எடிட்டிங் சான் லோகேஷ். கலை சி.எஸ். பாலசந்தர். பாடல்கள் யுகபாரதி.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை