தோழிக்கு பிக்பாஸ் நடிகை உணர்ச்சிகரமான மெசேஜ்..

by Chandru, Nov 18, 2020, 13:33 PM IST

பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளர் லாஸ்லியாவின் தந்தை கனடாவில் இரண்டு நாட்களுக்கு முன்பு காலமானார். மாரடைப்பு காரணமாக அவரது தந்தை மரியனேசன் காலமானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிக் பாஸ் வீட்டில் ஒரு தந்தையைப் போல லோஸ்லியாவுடன் நெருக்கமாக இருந்த இயக்குனர் சேரன் தனது இரங்கலைத் லாஸ்லியாவுக்கு தெரிவித்திருந்தார்.

அதேபோல் லாஸ்லியாவின் தோழி நடிகை அபிராமி இரங்கல் தெரிவித்திருக்கிறார். அபிராமி அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர். லாஸ்லியாவுடன் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று அவரது தோழியானார். நிகழ்ச்சிக்கு பிறகும் லாஸ்லியாவுடன் அபிராமி தொடர்பிலிருந்து வந்தார். லாஸ்லியாவின் தந்தையின் மறைவு குறித்து உணர்ச்சிப் பூர்வமான அறிக்கையைப் பகிர்ந்துள்ளார் அபிராமி.

"நான் இனி உங்களை என் கண்களால் பார்க்க முடியாது அல்லது உன் கால்களை என் கைகளால் தொட முடியாது, ஆனால் உன்னை என் இதயத்தில் என்றென்றும் நினைவில் கொள்வேன் அப்பா என்று தெரிவித்திருக்கும் அபிராமி லாஸ்லியாவுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு லாஸ்லியா கோலிவுட் படங்களில் நடிக்க முயற்சி செய்து வந்தார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் ஃப்ரண்ட்ஷிப் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை