நயன்தாராவை அக்கா என்று அழைத்த நடிகை..

by Chandru, Nov 19, 2020, 10:46 AM IST

நடிகை நயன்தாராவுக்கு 36வது பிறந்த தினம் அவரது ரசிகர்கள் இணைய தளத்தில் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர். நடிகை சமந்தா நயன்தாராவுக்கு வாழ்த்து பகிர்ந்தார். அக்கா நீங்கள்தான் எனக்கு உதாரணம் என்றார். அவர் கூறும்போது, தி ஒன் அண்ட் ஒன்லி நயன்தாராவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்னும் நீங்கள் தொடர்ந்து பிரகாசித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

எதையும் எதிர்த்துப் போராட நீங்கள்தான் எங்களுக்கு முன்னுதாரணம். உங்களுக்கு இன்னும் பலம் கூடுதலாகக் கிடைக்கட்டும். உங்கள் வலிமைக்கும், அமைதியான சாதனைக்கும் எனது சல்யூட் என்றார்.நயன்தாரா காதலன் விக்னேஷ் சிவன் கூறும்போது.தங்கமயீ அதே முன்னுதாரணத்துடன் எப்போதும் திகழ வேண்டும். அர்பணிப்பு, நேர்மை, நேரம் தவறாமை மூலம் இன்னும் உயரத்துக்கு பறந்துக்கொண்டிருக்கிறாய்.

கடவுள் உனக்கு எப்போதும் சந்தோஷத்தையும், தொடர் வெற்றியையும் அருள வேண்டும். வரும் ஆண்டுகளில் பாசிடிவிட்டியும் நல்ல தருணங்களும் உன்னைச் சூழ்ந்திருக்கட்டும் என்றார்.நயந்தாரா நடிப்பில் சமீபத்தில் மூக்குத்தி அம்மன் படம் ஒடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அடுத்த நெற்றிக் கண் மற்றும் காத்து வாக்குல் ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை