பிரபல நடிகருக்கு கொரோனா பரிசோதனை மற்றும் தனிமை.. 3 பேருக்கு தொற்றால் திகில்..

by Chandru, Nov 19, 2020, 17:15 PM IST

பாலிவுட்டில் கொரோனா பாதிப்பு இன்னும் பரவிய நிலையில் இருக்கிறது.சில மாதங்களுக்கு முன் இந்தி நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் என குடும்பத்துக்கே கொரோனா தொற்று ஏற்பட்டது. நடிகர்கள் விஷால், டாக்டர் ராஜசேகர், நடிகை நிக்கி கல்ராணி, தமன்னா, ஜீவிதா, ஐஸ்வர்யா அர்ஜுன், ராஜமவுலி போன்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர்.

இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோ னா தொற்று பாசிடிவ் ஏற்பட்டதாக அவரே அறிவித்தார். அடுத்த இரண்டு நாளில் தனக்கு கொரோனா தொற்று இருந்ததாகத் தவறாக மிஷின் காட்டியது. தனியார் மருத்துவமனையில் எடுத்த 3 பரிசோதனைகளில் கொரோனா தொற்று இல்லை என்பதும் உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் மாநில சுகாதார துறை அவரை தனிமையில் இருக்கச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் மீண்டும் பாலிவுட் பக்கம் தலைவைத்திருக்கிறது கொரோனா . பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் தற்போது தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார். இது பாலிவுட்டிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சல்மான்கானின் கார் டிரைவர் அசோக் மற்றும் அவரிடம் வேலை செய்யும் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மூவருக்கும் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது. அதைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.கார் டிரைவர் உள்ளிட்ட தன் வீட்டில் உள்ள 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் நடிகர் சல்மான்கான் தற்போது 14 நாட்கள் தனிமையில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு தற்போது கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவு விரைவில் தெரியும்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை