2022ல் பட ரிலீஸ் தேதி: இப்போதே படக் குழு அறிவிப்பு.. பாகுபலி நடிகரின் மற்றொரு பிரமாண்டம்..

by Chandru, Nov 19, 2020, 17:23 PM IST

இயக்குனர் நாக் அஸ்வின் தென்னிந்தியாவில் மிகவும் திறமையான இளம் இயக்குனர் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை படமான நடிகையர் திலகம் (தெலுங்கில் மகாநதி) இயக்கி பாராட்டு பெற்றார். இப்படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது பெற்றுத் தந்தது. இயக்குனர் நாக் அஸ்வின் ஒவ்வொரு திரைப்படத்தை உருவாக்கும் போதும் அதில் மிகுந்த கவனம் செலுத்துகிறார், அது திரையில் காட்சிகளாக வரும் போது ரசிக்கப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு படங்களை மட்டுமே செய்தார். அவர் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் என்ற மிகப் பெரிய பிரமாண்ட படத்தை இயக்க உள்ளார். இது நேரப் பயணம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. பிரபாஸ் தற்போது 'ராதே ஷ்யாம்' படத்தில் பிஸியாக இருப்பதால் இப்படம் இன்னும் தொடங்கவில்லை. ராதே ஷ்யாம், லவ் ரொமான்ஸ் கதையாக உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு 2021 கோடையில் வெளிவரும்.

இப்படத்தை முடித்தவுடன் பிரபாஸ் 'ஆதிபுருஷ்'படத்திற்காக ஓம் ரவுத்துடன் இணைகிறார். இதில் இந்தி நடிகர் சயீப் அலிகாம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரபாஸ் ராமர் வேடத்தில் நடிக்கிறார் என்று ஏற்கனவே கூறப்பட்டது. 3டியில் இப்படம் உருவாகவுள்ளது. இதில் நடிக்கும் மற்ற நட்சத்திர தேர்வு நடந்து வருகிறது.நாக் அஸ்வின் இயக்க பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2022ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் படப்பிடிப்பு தொடங்காத நிலையில் ரிலீஸ் தேதியைப் படக் குழு அறிவித்திருக்கிறது. தற்போது படப் பிடிப்புக்கு முந்தைய பணிகளில் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.ஏற்கனவே இப்படத்தில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அதுபற்றி உறுதி செய்யவில்லை.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை