போதை மருந்தில் சிக்கிய நடிகை கனவு நனவாகிறது..

by Chandru, Nov 19, 2020, 17:54 PM IST

ஒவ்வொரு நடிகர் நடிகைக்கும் ஒரு கனவு இருக்கும் அதுபோல் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் ஒரு கனவு உள்ளது. ரகுல் ப்ரீத் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, என் ஜி கே போன்ற படங்களில் நடித்தார் பின்னர் தெலுங்கு படத்தில் நடித்து வந்தார். இந்தியில் ஒரு கலக்கு கலக்கும் எண்ணத்துடன் நடிக்கச் சென்றார்.தனது முதல் இந்தி படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து நடித்தார்.

ஆனால் அது மோசமாக தோல்வியடைந்தது. ரகுலின் ஒரே வெற்றி 'டி டி பியார் தே', இப்படத்தில் தன்னைவிட வயதில் மூத்தவரான அஜய் தேவ்கனை காதலிப்பதுபோல் நடித்தார். இப்படத்தில் டாப் லெஸ் காட்சியில் ரகுல் நடித்திருந்தார். படத்திலும் அவர் மிகவும் கவர்ச்சியாகத் தோற்றமளித்தார். இதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அடுத்த பட வாய்ப்புக்காகக் காத்திருந்த ரகுலுக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.

அஜய் தேவ்கன் இயக்கி நடித்துத் தயாரிக்கும் படமாக 'மே டே படம் உருவாகிறது. இது அஜய்தேவ்கன் இயக்கும் முதல் படம். இதில் முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார். இப்படத்தில் ரகுல் ப்ரீத்தை ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார் அஜய் தேவ்கன். இதுகுறித்து ரகுல் மகிழ்ச்சி வெளியிட்டிருக்கிறார். அவர் கூறும்போது,மே டே' படத்தில் அஜய் தேவ்கன் மேடே படத்தில் அஜய் தேவ்கன் என்னையும் இணைத்திருப்பது எனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு. இது எவ்வளவு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை.

அமிதாப்பச்சன் ஐயாவுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு ஒரு கனவு. அது இப்படத்தில் நனவாகிறது. அஜய் தேவ்கனுக்கு நன்றி மற்றும் இக்கப்பல் சீக்கிரம் புறப்படத் தயாராகிறது. மே டே படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் ஹைதராபாத்தில் தொடங்க வுள்ளது. விறுவிறுப்பான இப்படத்தில் பைலட் வேடத் தில் ராகுல் நடிக்கிறார். பாலிவுட் போதைப்பொருள் வழக்கில் ரகுல் பெயர் சேர்க்கப்பட்டதால் ரகுல் சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டார். அவரிடன் என்சிபி அதிகாரிகளும் விசாரிணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை