டாக்டரிடம் மலர்ந்த காதல்.. ரகசியமாக 2வது திருமணம் செய்து கொண்ட பிரபலம்..!

by Logeswari, Nov 20, 2020, 11:22 AM IST

தமிழ் சினிமாவில் நடனம், இயக்கம், நடிப்பு எனப் பல சிறப்புகளை உடையவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் இன்றும் முன்னணி கதாநாயகனாக விளங்கி வருகிறார். இவரது நடன ஸ்டைலில் எப்பொழுதும் ஒரு தனித்தன்மை இருக்கும். அதற்குச் சான்று தான் ரவுடி பேபி பாட்டு. இது 1 பில்லியன் மக்களைக் கவர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றுள்ளார்.

சமீபத்தில் தேவி +2 திரைப்படத்தில் புதிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் நடனக் கலைஞராக இருந்த போது ரமலத் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தை பிறந்தது. அதில் மூத்த மகன் புற்று நோயால் 2010 ஆன் ஆண்டு மரணம் அடைந்தார். மூத்த மகன் இறந்த பிறகு கணவன், மனைவி இடையே பல பிரச்சனைகள் எழுந்து வந்துள்ளது.

அப்பொழுது பிரபு தேவா வில்லு படத்தை இயக்கிக்கொண்டு இருந்தார். இதற்கிடையே நயன்தாராவுடன் காதல் மலர்ந்தது. நயன்தாராவைத் திருமணம் செய்ய பிரபுதேவா தனது மனைவியை விவாகரத்து செய்தார். நயன்தாராவும் இந்து மதத்திற்கு மாறினார். ஆனால் இவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு இருவரின் காதல் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளியாய் அமைந்தது. இதன் பிறகு பிரபுதேவா நடனம் மற்றும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். சிலமாதங்களுக்கு முன்பு பிரபுதேவாவின் முதுகு எலும்பில் பிரச்சனை ஏற்பட்டு உடம்புக்கு முடியாமல் போனது. அப்போது பீகாரைச் சேர்ந்த பிசியோதெரபி டாக்டர் சிகிச்சை அளித்து வந்தார்.

இந்நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனால் இரு வீட்டாரின் சம்மதத்துடன் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதாகச் செய்திகள் தீயாய் பரவி வருகிறது. ஆனால் பிரபுதேவா பரவி வருகின்ற செய்திக்கு எந்த வித மறுப்பும் தெரிவிக்காதது ஆச்சரியமாக உள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை