கஜா புயலால் மாணவியை மருத்துவராக்கிய நடிகர்

by Chandru, Nov 21, 2020, 10:29 AM IST

கஜா புயல் பாதிப்பிலும் நிராதரவு நிலையிலும் அரசுப் பள்ளியில் படித்து 12 ஆம் வகுப்பில் 524 மதிப்பெண் எடுத்த பேராவூரணி பூக்கொல்லை மாணவி சகானா, மேற்படிப்பு படிக்க வழியில்லாமல் வறுமையில் தவித்தார். அந்த மாணவி குறித்து சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் தகவல் பரவியதையடுத்து அவரது குடிசை வீட்டிற்கு, தஞ்சாவூர் ஆட்சித்தலைவர் அண்ணாதுரை, சஹானாவின் வீட்டுக்கு சோலார் மூலம் மின் விளக்கு அமைத்துக் கொடுத்ததோடு, தன் சொந்தப் பணத்தில் பத்தாயிரத்தைக் கொடுத்து உதவினார்.

'

இந்நிலையில் இதனையறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் .. கடைசி வரைக்கும் போராடு!உனக்கு நான் இருக்கிறேன்!! என ஊக்கம் அளித்து சகானாவை நீட் பயிற்சி மையத்தில் சேர்த்து அம்மாணவியின் மருத்துவ கனவிற்கு உயிரோட்டம் அளித்துள்ளார். நடந்து முடிந்த நீட் தேர்வில் 273 மதிப்பெண் பெற்று 120 இடத்தை பிடித்த சகானாவுக்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி இடம் கிடைத்துள்ளது.

திரைப்பட நடிகர்கள் குர்யா, விஜய் சேதுபதி போன்ற சில நடிகர்கள் ஆதரவற்ற மற்றும் ஏழை மாணவ மாணவியர்களுக்கு அவர்களின் படிப்பு தொடர கல்வி உதவி வழங்கி வருகின்றனர். இதுபோன்ற உதவிகள் வரும் கால இளம் நடிகர்களுக்கும் முன்னுதாரணமாக அமைந்து மேலும் பலரை உதவி செய்ய தூண்டு கோளாக அமைந்துள்ளது. கஜா புயல் மாணவிக்கு உதவிய சிவகார்த்திகேயனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை