58 வயதில் புதிய மொழியில் அறிமுகமாகும் கமல் நடிகை..

by Chandru, Nov 26, 2020, 09:31 AM IST

கறுப்பு வெள்ளை காலத்தில் நடிகைகள் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழியில் நடிப்பதென்பது பெரிய விஷயம். 80கள் வரை கூட பாலிவுட் நடிகைகள் தமிழில் நடிப்பதை ஆச்சரியமாகவே பார்த்தார்கள். அதன்பிறகு திரையுலகம் கையடக்க கருவியாக செல்போன் வரை வந்த நிலையில் ஹாலிவுட் நடிகைகள் கூட எளிதாகக் கோலிவுட்டில் நடிக்கும் நிலை வந்திருக்கிறது.

70களில் சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர் ஜெயப்பிரதா. கமல்ஹாசனுடன் சலங்கை ஒலி. நினைத்தாலே இனிக்கும் படங்களிலும் விஜயகாந்த் நடித்த ஏழை ஜாதி உள்ளிட்ட பல மறக்கமுடியாத படங்களில் இவர் நடித்திருக்கிறார். அப்போதே இவர் தெலுங்கு, தமிழ் தவிர இந்தி படங்களிலும் நடித்தார். இவருக்கும் ஸ்ரீதேவிக்கும் தான் கடும் போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் இருவருமே தென்னிந்தியப் படங்களுக்கு முழுக்கு போட்டு பாலிவுட் படங்களில் மட்டுமே நடித்தனர்.

தமிழ். தெலுங்கு, கன்னடம். மலையாளம். இந்தி. பெங்காலி போன்ற பல மொழிகளில் நடித்ததுடன் தி டிசையர் என்ற சீன மொழி படத்திலும் நடித்திருக்கிறார் ஜெயப்ரதா. தற்போது ஜெயப்ரதாவுக்கு 58 வயது ஆகிறது. இந்த வயதில் அவர் முதன்முறையாகப் பஞ்சாபி மொழியில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். பூத் அங்கில் துஸ்ஸி க்ரேட் ஹோ என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை கே.சி.பொகாடிய இயக்க உள்ளார். இது ஹாரர் காமெடி படமாக உருவாகிறது.

ஜெயப்பிரதா திருமணமே செய்துகொள்ளாமல் இன்னும் சிங்கிள் என்ற அந்தஸ்திலேயே வாழ்ந்து வருகிறார்.கடைசியாகத் தமிழில் ஜெயப்ரதா கேணி என்ற படத்தில் 2018ம் ஆண்டு நடித்தார். அதன்பிறகு 2 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது பஞ்சாபி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்