கெஸ்ட்ரோலில் நடிக்க முழு சம்பளம் வாங்கும் நடிகை..

by Chandru, Nov 26, 2020, 09:38 AM IST

பிரபல நடிகர்கள் தங்களுக்குத் தெரிந்த நட்பு ஹீரோக்கள் படங்களில் சில சமயம் கெஸ்ட் ரோலில் நடிக்கச் சம்மதிக்கின்றனர். கமல்ஹாசன், ரஜினிகாந்த் தொடங்கி ஆர்யா, ஜீவா வரை பலர் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கின்றனர். இவர்களில் சிலர் நட்புக்காக நடிப்பதால் சம்பளம் வாங்க மறுத்துவிடுவதுண்டு. ஆனால் ஒரு நடிகை கெஸ்ட் ரோலில் நடிக்கத் தனது முழு சம்பளத்தையும் வாங்கி இருக்கிறார்.

இந்தியில் அமிதாப்பச்சன், டாப்ஸி போன்றவர்கள் நடித்த படம் பிங்க். இப்படம் தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் அஜீத்குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்தனர். தற்போது பிங்க் படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. இதில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். தில்ராஜூ தயாரிக்க, வேணு ஸ்ரீராம் இயக்குகிறார்.

பெண்கள் மீதான பாலியல் பலாத்தாரத்தை எதிர்த்துப் போராடும் சில பெண்கள் மற்றும் ஒரு வழக்கறிஞரின் கதையாக இதன் கதை அமைக்கப்பட்டிருந்தது. தமிழில் அப்படியே இயக்கப்பட்டாலும் தெலுங்கில் இதை கமர்ஷியல் ஸ்கிரிப்பட்டாக மாற்றி அமைக்கிறார்கள். இப்படத்துக்கு வக்கில் சாப் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. பிங்க் படத்தில் இல்லாத ஒரு புதிய பாத்திரத்தை இதில் உருவாக்கி இருக்கிறார்கள். அந்த வேடத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.

இது படம் முழுக்க வரும் கதாபாத்திரம் இல்லை. கெஸ்ட் ரோலாக வரும் பாத்திரம்தான் ஆனால் கதைக்கு முக்கிய பாத்திரம் என்பதால் அதில் நடிக்கத் தனது முழு சம்பளத்தையும் ஸ்ருதி வாங்கி இருக்கிறாராம்.ஸ்ருதிஹாசன் தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்திலும் மற்றும் தெலுங்கில் கிராக் படத்திலும் நடிக்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை