மாலத்தீவு சென்ற நடிகைகள்: நக்கலடித்த ஹீரோயின்..

by Chandru, Nov 26, 2020, 09:50 AM IST

கொரோனா தொற்று ஊரடங்கு திரையுலக நட்சத்திரங்களை வீட்டில் முடக்கிப் போட்டிருந்தது. 6 மாதம் வீட்டில் சமையல். உடற் பயிற்சி யோகா என்று பொழுதை கழித்தனர். காஜல் அகர்வால் கொரோனா ஊரடங்கில் தனது 2 வருட பாய்ஃபிரண்டை திருமணம் செய்துக் கொண்டார், தமன்னா, நிக்கி கல்ராணி. ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா அர்ஜூன், ஜீவிதா மற்றும் விஷால், ராஜசேகர் போன்ற நடிகைகள் மற்றும் நடிகர்கள் கொரோனா தொற்றால் பாதித்து சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தனர்.

கொரோனா தளர்வு அறிவிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. வீட்டுக்குள் முடங்கி இருந்த நடிகைகள் பலர் விடுமுறை பயணம் புறப்பட்டு விட்டனர். காஜல் அகர்வால் தேனிலவுக்கு மாலத்தீவு சென்று அங்குக் கணவருடன் சுற்றித் திரிந்தும் கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவிங் செய்தும் படங்களை நெட்டில் வெளியிட்டு கவர்ந்தார். அவரைத் தொடர்ந்து நடிகை வேதிகா மாலத்தீவு சென்றார். அங்கு ஸ்பாவிற்கு சென்று வெதுவெதுப்பான நீர் நிரம்பிய பாத் டப்பில் குளித்து அந்த வீடியோவை வெளியிட்டார்.

அவரைத் தொடர்ந்து ரகுல் ப்ரீத் தனது குடும்பத்துடன் மாலத்தீவு சென்றார். அங்கு நீச்சல் உடை அணிந்து படங்கள் வெளியிட்டார். அதேபோல் பிரணிதா சுபாஷ் மாலத்தீவிலிருந்து தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டார். இவர்களைத் தொடர்ந்து நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடன் மாலத்தீவுக்கு விடுமுறை பயணமாக சென்றிருக்கிறார். சமந்தா தனது மாலத்தீவு பயணத்தின் படங்களை வெளியிட்டார். ஸ்கூபா உடை அணிந்து கடலுக்குள் குதித்து நீந்தினர். கோலிவுட் நட்சத்திரங்கள் பலர் விடுமுறை பயணமாக மாலத்தீவு சென்றனர்.

இந்நிலையில் சார்லி சாப்ளின் 2 படத்தில் பிரபுதேவாவுடன் நடித்த அதா சர்மா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டார். இயற்கை சூழல் சூழ்ந்த பகுதியின் அருகே தண்ணீர் சூழ்ந்த பகுதியின் ரம்மியான காட்சியாக அது இருந்தது. இதுகுறித்து அவர் வெளியிட்ட மெசேஜில்,இது மாலத்தீவு அல்ல மஹாராஜபுரம். இந்த இடத்துக்கு எப்படி வந்தேன் என்று கேட்காதீர்கள். இதற்கு முன் யாரும் இங்கு ஷூட்டிங் செய்ததில்லை. நான் தண்ணீரில் மூழ்குவதுபோல் ஒரு காட்சி இந்த இடத்தில் படமாக்கப்பட்டது. பின்பகுதியில் மலைகள் சூழ்ந்த இடம் என்றதுடன் நிகரற்ற இந்தியா என்ற ஹேஷ்டேக் பகிர்ந்திருந்தார்.

இந்தியாவிலேயே அழகான சுற்றுலா தலங்கள் இருக்கும் நிலையில் ஹீரோயின்கள் மாலத்தீவு செல்வதை நக்கலடிக்கும் விதமாக அதா சர்மா இப்படியொரு கிராமத்துப் பின்னணி வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.மஹாராஜபுரம் தமிழ்நாடு கேரளா பார்டருக்கு நடுவில் உள்ள அழகான ஒரு கிராமம் ஆகும். அதா சர்மா தற்போது இரண்டு இந்தி படங்களிலும் ஒரு குறும்படத்திலும் நடித்து வருகிறார்.

More Cinema News


அண்மைய செய்திகள்