திருமண மூடிலிருந்து வெளியில் வராத பிரபல நடிகை..

by Chandru, Nov 27, 2020, 10:27 AM IST

35 வயது தாண்டியும் சில நடிகைகள் திருமணம்பற்றி யோசிக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். நடிகை காஜல் அகர்வாலும் திருமணம் பற்றி யோசிக்காமல் ரகசிய காதலனுடன் ரகசியமாக டேட்டிங் செய்து வந்தார். காஜலின் தங்கை நிஷா அகர்வாலுக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்த நிலையிலும் காஜல் படங்களில் நடிப்பது, புதிய படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்குவது என்று பிஸியாக இருந்தார். ஆனால் அவரை கொரோனா ஊரடங்கு வீட்டுக்குள் முடக்கிப் போட்டது. எப்போதும் படப்பிடிப்பு என்று சாக்கு சொல்லிவிட்டு ஊர் ஊராக பறந்துகொண்டிருந்த காஜல் இம்முறை குடும்பத்தினரிடம் வசமாக சிக்கிக் கொண்டார். சுமார் 5 மாதம் அவர் வீட்டுக்குள்ளேயே இருந்த நிலையில் குடும்பத்தினர் காஜலை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினர்.

அதிலிருந்து மீண்டு வர முடியாத நிலையில் திருமணத்துக்கு சம்மதித்ததுடன் தனது ரகசிய காதலன் கவுதம் கிட்ச்லு பற்றி வீட்டில் தெரிவித்து அவரையே மணப்பதாக கூறினார். பிறகு குடும்பத்தார் பேசி திருமணம் செய்து வைத்தனர். கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு காஜல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் எண்ணத்தில் இருந்தார். ஆனால் அவர் நடிக்கும் இந்தியன் 2, ஆச்சார்யா படப்பிடிப்புகள் தொடங்குவது போல் தெரியாததால் திடீரென்று தேனிலவுக்கு கணவருடன் புறப்பட்டு மாலத்தீவு சென்றார். அங்கு கவுதம் கிட்ச்லுவுடன் கடலுக்கு அடியில் நீந்துதல், அங்குள்ள ரெஸ்டாரண்ட்டில் பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபட்டு அப்படங்களை நெட்டில் வெளியிட்டார்.

திருமணம் முடிந்து 3 வாரம் ஆகி தேனிலவும் முடிந்த நிலையில் இன்னமும் திருமணத்துக்கு முன் நடந்த பார்ட்டி மூடிலிருந்து காஜலால் வெளிவரமுடியவில்லை. மாலத்தீவில் தேனிலவு கொண்டாடும் அவர் அங்கிருந்தபடி நேற்று தனது இணையதள பக்கத்தில் திருமணத்துக்கு முந்தைய பார்ட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அப்படத்தில் காஜல், கணவர் கவுதம், தங்கை நிஷா மற்றும் நண்பர்கள் உள்ளனர். பிறகு அவர் வெளியிட்டுள்ள மெசேஜில், இந்த பார்ட்டியை மறக்க முடியாது. மேலும் திருமணத்தை நல்லமுறையில் ஈவண்ட் கம்பெனி நடத்தியது அவர்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். சீக்கிரமே மும்பை திரும்பும் காஜல் ஐதாராபாத் வந்து சிரஞ்சீவியின் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை