வாடகை தாய் மூலம் பெற்ற குழந்தையுடன் ஷாப்பிங் சென்ற நடிகை..

by Chandru, Nov 27, 2020, 10:29 AM IST

நடிகைகள் மற்றும் நடிகர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுகின்றனர். கோலிவுட்டில் ஒரு சில சம்பவங்கள் அது போல் நடந்தாலும் அதுபற்றி யாரும் வெளிபடையாக சொல்வதைல்லை. பாலிவுட்டில் இந்த விவரத்தை வெளிப்படையாகவே அறிவிக்கின்றனர். இந்தி நடிகர் ஷாருக்கான் கடந்த 2 வருடங்களுக்கு வாடகை தாய் முலம் ஆண் குழந்தை பெற்றார். ஏற்கனவே இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தும் 3வது குழந்தையை வாடகை தாய் மூலம் பெற்றார். அதேபோல் அமிர்கான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார். இந்த பட்டியலில் இன்னும் பலர் உள்ளனர்.

தமிழில் மிஸ்டர் ரோமியோ படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்தவர் ஷில்பா ஷெட்டி. குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். ஷில்பாவின் கணவர் ராஜ் குந்த்ரா. இவர்கள் வாடகை தாய் முலம் குழந்தை பெற்றனர். குழந்தை பிறந்தது முதல் வீட்டிலேயே கவனமாக வளர்த்து வந்தார் ஷில்பா. அக்குழந்தைக்கு சமிஷா என பெயரிட்டார். தற்போது குழந்தை ஓரளவுக்கு வளர்ந்து விட்ட நிலையில் நேற்று மும்பையில் அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு ஷாப்பிங் வந்தார். நீல நிற உடை அணிந்து வந்த ஷில்பா குழந்தைக்கு அழகான பூப்போட்ட ப்ளு நிற உடை அணிந்திருந்தார்.

குழந்தையுடன் ஷாப்பிங் வந்த ஷில்பாவை அங்கிருந்து புகைப்பட நிபுணர் கிளிக் செய்து அதை நெட்டில் வெளியிட்டார். ஷில்பாவும் எந்த மறுப்பும் சொல்லாமல் போட்டோவுக்கு சிரித்தபடி போஸ் கொடுத்தார். சில மாதங்களுக்கு முன் ஷில்பா ஷெட்டி மீது சச்சின் ஜோஷி என்பவர் தங்க மோசடி புகார் அளித்திருந்தார். இது பரபரப்பானது. தங்கம் தருவதாக தன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு ஷில்பா ஏமாற்றிவிட்டார் என்று அந்த புகாரில் கூறி இருந்தார். ஆனால் அதை ஷில்பா மறுத்தார். சச்சின் ஜோஷி சொல்லும் அனைத்தும் பொய் என்று விளக்கம் அளித்தார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை