பிரபல நடிகர் படத்தில் நடிக்கவில்லை.. நடிகை வெளியிட்ட புதுபட பட்டியல்..

Advertisement

ஹீரோயின்கள் சிலர் தங்களை பற்றி பெரிய ஹீரோ படங்களில் நடிக்கிறார் என்று இணைத்து கிசுகிசு வருமா என்று எதிர்பார்க்கின்றனர். சில நடிகைகள் அப்படி வாய்ப்பு வந்தாலும் அதை பட நிறுவனம் சொல்லும் வரை வெளியில் சொல்லாமல் மவுனம் காக்கின்றனர். அதற்கு காரணம் அவசரப்பட்டு வாய்விட்டால் வாய்ப்பு கைநழுவிபோய்விடும் என்ற பயம் ஒரு காரணம். இப்படித்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஒரு படத்தில் தான் நடிப்பதாக நடிகர் ஜெயராம் கூறியிருந்தார். ஆனால் அந்த படத்தில் அவருக்கு பதில் வேறு ஹீரோ நடித்தார். சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் அவருக்கு போதை மருந்து கொடுத்ததாக அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி கைதானார்.

அவர் கொடுத்த வாக்கு மூலத்தின் பேரில் நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான், தீபிகா படுகோன் போன்ற பிரபலங்கள் இந்த வழக்கில் சம்மந்தப்படுத்தப்பட்டனர். அவர்களிடம் போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் விசாரித்தனர். ஆனால் இவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஏற்கனவே கைதான ரியா சக்ரபோர்த்தியும் ஜாமீனில் வெளியில் வந்தார். ரகுல் ப்ரீத் சினிமா வாழ்க்கை போதை மருந்து வழக்கோடு முடிந்துவிடும் என்று சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் மீண்டும் பட வாய்ப்புகள் பெற்று அடுத்த ரவுண்டுக்கு தயாராகி இருக்கிறார். குறிப்பிட்ட சில படங்களில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் விஜய்யுடன் நடிக்கிறார், சிரஞ்சீவியுடன் நடிக்கிறார் என்று கிசுகிசுக்கள் வெளியாகி வருகின்றன. இதனால் வரவிருக்கும் வாய்ப்புகள் கைநழுவிப் போகுமோ என்ற தயக்கத்தில் இருக்கிறார்.

இதையடுத்து தான் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் படங்களின் லிஸ்டை ரகுலே தனது மேனேஜர் ஹரினாத் என்பவர் மூலம் தெரிவித்திருக்கிறார். அதில், தமிழில் சிவகார்த்திகேயன் படத்திலும் தெலுங்கில் நிதின் ஜோடியாக செக் படத்தில் சந்திரசேகர் இயக்கத்திலும் யெல்ட்டி என்ற படத்தில் கிரிஷ் இயக்கத்திலும் நடிக்கிறார். இது தவிர பாலிவுட்டில் அர்ஜூன் கபூர் - ஜான் ஆப்ரகாம் நடிக்கும் படம் மற்றும் அஜய் தேவ்கன் இயக்கி நடிக்க அமிதாப்பச்சனும் முக்கிய வேடத்தில் நடிக்கும் மே டே படத்திலும் நடிக்கிறார். தற்போதைக்கு இந்த படங்களில் மட்டுமே ரகுல் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதுதவிர வேறு பிரபல நடிகர் படத்தில் நடிக்கிறார் என்பதெல்லாம் உண்மையில்லை எனக் கூறி உள்ளார். ரகுல் தற்போது குடும்பத்துடன் மாலத்தீவில் விடுமுறை பயணத்தை அனுபவித்து இருக்கிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>