யஷ் உடன் நடிக்கும் புற்று நோய் பாதிப்பு நடிகர்.. இறுதிகட்ட படப்பிடிப்பால் பரபரப்பு

by Chandru, Nov 27, 2020, 10:13 AM IST

கன்னட நடிகர் யஷ் தனது மொழி படத்தில் மட்டும் பேசப்பட்டு வந்தார். இந்நிலையில் கே ஜி எஃப் என்ற படத்தை கன்னடம் தவிர தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் 2 ஆண்டுக்கு முன் வெளியிட்டார். எல்ல மொழியிலும் அப்படம் ஹிட்டானது இதை யடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை கே ஜி எஃப் அத்தியாயம் 2 என்ற பெயரில் நடித்து வருகிறார். கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதையடுத்து படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. அதில் பங்கேற்க பெங்களூரிலிருந்து மெய்க்காப்பாளர்களுடன் யஷ் ஐதராபாத் புறப்பட்டு வந்தார்.

ஆரன்ஞ் நிற டி-ஷர்ட் மற்றும் சாம்பல் டெனிம் ஆகியவற்றில் நச்சென்று வந்தவர் கொரோனா பாதுகாப்புக்காக முககவசம் அணிந்திருந்தார். பிறகு விமான நிலையத்திலிருந்து படப்பிடிப்பு தளத்துக்கு புறப்பட்டு சென்றார். கே ஜி எஃப் 2 படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பாக பரபரப்பாக இது நடக்கிறது. டிசம்பர் மாதம் 3வது வாரம் வரை இதன் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் மிகப் பெரிய செட் அமைக்கப்பட்டுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கும், கே.ஜி.எஃப்: அத்தியாயம் 2 2021 இல் திரையரங்குகளில் வெளியாகும். கே.ஜி.எஃப்: அத்தியாயம் 2 இன் திட்டங்களைப் பற்றி யஷுக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் கூறும்போது. "இது யஷ் இன்று ஹைதராபாத்திற்குச் செல்லும் படப்பிடிப்பு அட்டவணையின் இறுதிக் கட்டமாகும்.

டிசம்பர் மாதம் மத்தி வரை இந்த படப்பிடிப்பு தொடரும். யஷ் உட்பட அனைவரும் மிகவும் உற்சாகமாக கே.ஜி.எஃப் 2 நிறைவடையும் தருவாயில் படப்பிடிப்புல் பங்கேற்று வருகின்றனர். இப்படத்தில் முக்கிய வேடத்தில் சஞ்சய் தத் நடிக்கிறார். அவர் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு 2 மாதங்களுக்கு முன் மும்பை மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். குணம் அடைந்த நிலையில் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி கே ஜி எஃப் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இப்படத்தில் அதிரா என்ற கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிக்கவுள்ளார். முந்தைய நேர்காணலில், அவர் தனது பாத்திரத்தை அவென்ஜர்ஸ் தானோஸுடன் ஒப்பிட்டிருந்தார். மேலும் ரவீனா டாண்டனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை