மதமாற்ற வற்புறுத்தல் குறித்து பிரதமருக்கு நடிகை டிவிட்.. இசை அமைப்பாளர் மனைவிக்கு சப்போர்ட்..

by Chandru, Nov 29, 2020, 14:41 PM IST

நடிகை கங்கனா ரனாவத் தினமும் ஒரு சர்ச்சை என்ற பாணியில் தனது இணையதளத்தை பயன்படுத்தி வருகிறார். ஏற்கனவே இவர் மத உணர்வை தூண்டி கலவரத்தை ஏற்படுத்த முயல்வதாக மும்பை போலீசில் கோர்ட் உத்தரவுபடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை விசாரணைக்கு வருமாறு 3 முறை போலீசார் சம்மன் அனுப்பிவிட்டனர். ஆனால் ஆஜராகவில்லை, இதுகுறித்து மும்பை ஐகோட்டில் மனு தாக்கல் செய்து இடைக்கால உத்தரவு பெற்றிருக்கிறார். ஆனாலும் அவருக்கு தகுந்த அவகாசம் அளித்திருக்கும் கோர்ட் மற்றொரு நாளில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் கங்கனா ஐதராபாத் வந்தார். அங்கு ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நடக்கும் தலைவி பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடிக்கிறார்.

இந்நிலையில் கங்கனா வெளியிட்டுள்ள மற்றொரு டிவிட்டரில் மறைந்த பாலிவுட் பாடகர் வாஜித் கான் மனைவி கமல்ருக் என்பவருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். வாஜித்தை வேற்று மதத்தை சேர்ந்த கமல்ருக் திருமணம் செய்து கொண்டார். அவரை இஸ்லாம் மதத்துக்கு மாறும்படி வாஜித் கானின் சகோதரிகள் வற்புறுத்தி வருகிறார்களாம். அதை கமல்ருக் தற்போது வெளிப்படுத்தி இருக்கிறார். கமல்ருக் பார்சி இன மைனாரிட்டி பிரிவை சேர்ந்தவர். இதுமதமாற்ற தடை சட்டத்துக்கு எதிரான செயல் என கமல்ருக் தெரிவித்திருக்கிறார். அவருக்கு கங்கனா ரனாவத் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

அவர் இதுபற்றி டிவிட்டரில் வெளியிட்ட மெசேஜில், மதம்மாறி திருமணம் செய்வர்களை தங்கள் மதத்துக்கு மாற வற்புறுத்துவதை கண்டித்திருக்கிறார். கங்கனா கூறும் போது, பார்சிகள் இந்த தேசத்தின் உண்மையான சிறுபான்மையினர், அவர்கள் படையெடுப்பாளர்களாக வரவில்லை, அவர்கள் தேடுபவர்களாக வந்து தாய் இந்தியாவின் அன்பை மெதுவாகக் கோரினர். அவர்களின் சிறிய மக்கள் தொகை இந்த நாட்டின் அழகு, வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது. கமல்ருக் என் நண்பர் விதவை, ஒரு பார்சி பெண், அவர் தனது குடும்பத்தினரால் மதமாற்றத்திற்காக துன்புறுத்தப்படுகிறார். நான் கேட்க விரும்புகிறேன்.

நாடகம், தலை துண்டிக்கப்படுதல், கலவரம் மற்றும் மாற்றங்களைத் தேடும் அனுதாபத்தைச் செய்யாத சிறுபான்மையினர், நாம் அவர்களை எவ்வாறு பாதுகாக்கிறோம்? ஒரு தாயாக இந்தியாவின் சொந்த தன்மையை வெளிப்படுத்துகிறது, பெரும்பாலான நாடகங்களை நியாயமற்ற முறையில் செய்யும் குழந்தை அதிக கவனத்தையும் நன்மைகளையும் பெறுகிறது. தகுதியுள்ளவர், உணர்திறன் மிக்கவர், அக்கறையுள்ளவர், தகுதியுள்ளவருக்கு பலினில்லாததாக உள்ளது. நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இவ்வாறு கூறிய கங்கனா தனது டிவிட்ர் மெசேஜை பிரதமர் மோடிக்கு டேக் செய்திருக்கிறார்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்