ஆசிய நாடுகளில் லஞ்சம் : முதலிடத்தில் இருக்குது இந்தியா

ஆசிய அளவில் அதிகம் லஞ்சம் பெறப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

by Balaji, Nov 29, 2020, 15:08 PM IST

அரசின் சேவைகளைப் பெறுவதற்கு, லஞ்சம் பெறப்படுவதில் உலகில் எந்த நாடுகளும் விதிவிலக்கல்ல. ஆசிய நாடுகளில் இந்தப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. ஆசிய நாடுகளில் புழக்கத்தில் உள்ள லஞ்ம் தொடர்பாக ஊழல் கண்காணிப்பு அமைப்பான கரப்ஷன் வாட்ச் டாக் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதற்காக, நாடு முழுவதும் சுமார் 2,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 17-ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 17-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வு குறித்த அறிக்கையை அந்த அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது.

அதில், அரசின் சேவைகளைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுப்பது அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியா 39 சதவீதமாக உள்ளது . இது ஆசியாவிலேயே முதலிடம் என்றும் தெரிவித்து உள்ளது. பொது சேவைகளைப் பெற தனிப்பட்ட தொடர்புகளைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக உள்ளது. அரசின் சேவைகளைப் பெற ஏன் லஞ்சம் கொடுத்தீர்கள் என்ற கேள்விக்கு, அதிகாரிகளின் வற்புறுத்தல்தான் காரணமாகவே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளதாக 50 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். சேவையைப் பெற லஞ்சம் கொடுப்பதைத் தவிர வேறுவழியில்லை என்று 32 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது புகாா் தெரிவித்தால் அதற்கான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று 63 சதவீத பேர் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

லஞ்சத்தைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொது சேவைகளை வழங்குவதில் தங்களது நிர்வாகத்தைச் சீரமைக்க வேண்டும். அரசின் சேவைகளைப் பெற சிக்கலான வழிமுறைகள் உள்ளது. சேவை பெறுவதில் தாமதம், கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது, போதிய கண்காணிப்பு இல்லாதது போன்றவற்றின் காரணமாக இந்தியாவில் லஞ்சம் அதிக அளவில் புழக்கத்தில் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் லஞ்சம் அதிகம் காணப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவைத் தொடா்ந்து கம்போடியா, இந்தோனேசியா ஆகியவை உள்ளன. மாலத்தீவுகள், ஜப்பான் நாடுகளில் குறைந்த அளவில் லஞ்சம் புழங்குவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Special article News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை