மூன்று நண்பர்கள்.. ரெண்டு கல்யாணம்.. கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் காமெடி கலாட்டா..

Advertisement

பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகும் வெப் சிரீஸ் ட்ரிபிள்ஸ் சாருகேஷ் சேகரால் இயக்குகிறார். இதில் ஜெய் , வாணி போஜன், விவேக் ப்ரசன்னா, மற்றும் ராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளார்கள். துள்ளலான காமெடியில் 8 அத்தியாயமாக வெளிவரும். ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ், பென்ஞ் ஸ்டோன் ஃபிலிம் ஸுடன் இணைந்து வெளியிடவுள்ள முதல் தமிழ் தொடர் “ட்ரிபிள்ஸ்”. ராம், மாது மற்றும் சீனு ஆகிய மூன்று நண்பர்களின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அதிலிருந்து அவர்கள் வெளிவருவதை சுவாரசியமாக விவரிக்கும் கதை தான் இது. தொழிலில் பங்குதாரர்களாகவும் இணைபிரியா நண்பர்களாகவும் இருக்கும் மூன்று பேருடைய வாழ்வில் நடக்கும் குழப்பங்களே இதன் கதை.

திருமணத்தில் ஏற்பட்ட ஒரு குழப்பத்திலிருந்து தப்பித்து தங்களை தாங்களே கண்டறிவதற்காக கோவாவிற்கு செல்லும் நண்பர்களை, ஒரு கடன்காரர் துரத்த, அதை தொடர்ந்து நடக்கும் களேபரங்கள் 8-பகுதிகளாக சொல்லப்பட்டுள்ளது. இந்த காதல்-காமெடித் தொடரில், வாணி போஜன் மற்றும் சிறப்பான நடிப்பு திறன் கொண்ட விவேக் ப்ரசன்னா, ராஜ்குமார், மாதுரி எம்ஜே, சம்பத், ஆகியோருடன் தமிழ் சினிமாவின் இளம் நட்சத்திரமான ஜெய், முதன்முதலாக டிஜிட்டலில் அறிமுகமாகிறார். கார்த்திக்சுப்புராஜால் தயாரிக்கப்பட்டு சாருகேஷ் சேகரின் இயக்கத்தில் வெளிவரும் இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸின், “ட்ரிபிள்ஸ்” டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் ப்ரத்யேகமாக வெளியிடப்படுகிறது. நடிகர் ஜெய் இத்தொடர் குறித்து கூறியுள்ளது:“ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸின் புத்தம்புதிய தொடரான “ட்ரிபிள்ஸ்”, மூன்று இணை பிரியா நண்பர்கள் மற்றும் அவர்கள் வாழ்வில் ஏற்படும் குழப்பங்களை நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சமுடன் விவரிக்கும் கதை.

இதனை உருவாக்கியவர்கள் இதன் திரைக்கதையில் கவனம் செலுத்தி, நகைச்சுவை மேதை க்ரேஸி மோகனின் காமெடி நடைபோன்று, அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தும் நகைச்சுவையுடன் இதனை வழங்கியுள்ளனர். அனைவருக்கும் தங்களின் நெருங்கிய நண்பர் கூட்டத்தை நினைவுபடுத்தும்படி அமைந்துள்ள ” ட்ரிபிள்ஸ்” பரபரப்பாக நகரும் வேடிக்கை நிரம்பிய காமெடி கதை. நிச்சயமாக இது என் வாழ்வின் பழைய நினைவுகளை கிளறியது. உங்கள் வாழ்வையும் ஞாபகப்படுத்தும். இவ்வாறு ஜெய் கூறினார். நடிகை வாணி போஜன் கூறும்போது, “ட்ரிபிள்ஸ்” 3 நண்பர்களை இணைக்கும் அதே சமயம், ஒரு முக்கோண காதலையும், ஒரு கடன் முதலையையும் திரைக்கதைக்குள் அழகாக பொருத்தி, காமெடியாக சொல்லியிருக்கும் சிறந்த கதை. முதல் அத்தியாயம் முதல் கடைசி அத்தியாயம் வரை ட்ராமா, நகைச்சுவை மற்றும் பரபர கலாட்டாக்கள் நிறைந்த இத்தொடர், பார்ப்பவர்களின் மனதில் நிச்சயம் புன்னகை வரவழைக்கும்.

பெரும் திறமை வாய்ந்த படகுழுவினருடன் இத்தொடரில் பணிபுரிந்தது மிக்க மகிழ்ச்சி. இதை உருவாக்குவதில் ஏற்பட்ட சந்தோஷத்தை போலவே இதைப் பார்ப்பவர்களும் மிக்க மகிழ்ச்சியடைவார்கள் என நம்புகிறேன்” என்றார். தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ், ”ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மனதுக்கு மிகவும் பிடித்த பல தொடர்களை உருவாக்கியுள்ளது. நாங்கள் இந்த தளத்தின் முதல் தமிழ் தொடரான “ட்ரிபிள்ஸ்”. தொடரை இதில் வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம். மனம் மகிழ வைக்கும் இந்த முழு நீள நகைச்சுவைத் தொடரில், என் மனதுக்கு நெருக்கமான தமிழ் பார்வையாளர்கள் தங்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட மற்றும் தங்கள் வாழ்வில் தொடர்புப்படுத்தக் கூடிய சில பாத்திரங்களைப் பார்க்கலாம். இத்தொடரின் வேடிக்கையான வசனங்கள் ரசிகர்கள் அனைவரையும் கடைசி வரை சிரிப்பில் ஆழ்த்தும்” என்று கூறினார்.

கதை சுருக்கம்:
இரண்டாவது முறையாக, திருமணத்திற்கு தயாராகி வரும், ராம் சரியான முடிவெடுக்க முடியாமல் தவித்து வருகிறான். அப்போது, அவனது நெருங்கிய நண்பர்களான மாது மற்றும் சீனு அவனை உற்சாகப்படுத்த முயற்சி செய்கின்றனர். இந்த சமயத்தில் திருமண கூடத்தில் அவனது முதல் மனைவி மீரா உள்ளே நுழைவதால், திடீர் திருப்பம் ஏற்படுகிறது. குழப்பமான இந்தச் சூழ்நிலையில் நண்பர்கள், அனைவருக்கும் ஏற்ற சரியான முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆனால், கதையில் மற்றொரு திருப்பமாக, இந்த மூவரின் காஃபி ஷாப் நடத்தும் நீண்ட நாள் கனவு சிம்ம சொப்பனமாகி அவர்களை மறக்க முடியாத ஒரு கோவா பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது! வரும் டிசம்பர் 11, 2020 முதல் டிஸ்னி + ஹாட் ஸ்டார் விஐபியில் “ட்ரிபிள்ஸ்” தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் பார்க்கலாம்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>