ஜனவரியில் ஷூட்டிங்கை முடிக்க தல நடிகர் திட்டம்..

by Chandru, Dec 2, 2020, 13:47 PM IST

நேர் கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜீத் நடிக்கும் படம் வலிமை. இப்படத்தை எச்.வினோத் டைரக்டு செய்கிறார். இவர் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியவர்.அஜீத் படத்தை இயக்க நேரடி கதையை வினோத் உருவாக்கி இருந்தார். ஆனால் அவருக்கு பிங்க் இந்தி படத்தின் ரீமேக்கை இயக்க வாய்ப்பளித்தார் அஜீத். அதுவே நேர்கொண்ட பார்வை படமாக வெளியானது. இப்படத்துக்கு பிறகு வினோத்தின் நேரடி கதையான வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜீத். ஐதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் இதன் படப்பிடிப்பு நடந்தபோது கொரோனா ஊரடங்கு அமலானதால் படப்பிடிப்பு தடைப்பட்டது. அடுத்த 7 மாதங்கள் படப்பிடிப்பு தொடங்கப்படாமலிருந்தது. கடந்த மாதம் தான் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.

அஜீத் நடித்த பைக் ரேஸ் சண்டை காட்சிகள் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டன. இதில் பைக் கவிழ்ந்ததில் அஜீத் காயம் அடைந்தார். சிகிச்சைக்கு பிறகு மீண்டும் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். ராமோஜிராவ் ஸ்டியோவில் தற்போதைக்கு ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கதிட்டமிடப்பட்டு வருகிறது. வலிமை படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் படமாக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா காலகட்டம் அதற்கு இடம் தரவில்லை. எனவே வெளிநாட்டு காட்சிகள் கைவிடப்பட்டு இந்தியாவிலே முக்கிய இடங்களில் ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி 2021க்குள் வலிமை படத்தின் ஷூட்டிங் கில் பங்கேற்று நடித்து முடிக்க அஜீத் முடிவு செய்திருக்கிறார்.

அநேகமாக ஏப்ரல் வெளியீ டாக இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் அஜீத் வலிமை ஷூட்டிங்கில் பைக்கில் சென்று வீலிங் செய்த புகைப்படம் நெட்டில் வைரலானது. தற்போது ரசிகர்கள் அஜீத்தின் வலிமை பட ஃபர்ஸ்ட்லுக் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வலிமை படத்தை முடித்த பிறகு யார் படத்தில் அஜீத் நடிப்பார் என்று இப்போதே ரசிகர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ரசிகர்கள் தங்கள் ஆசையை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். ஆனால் அஜீத் எடுக்கும் முடிவு என்ன என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்