நடிகையின் ஆடம்பர திருமண பத்திரிக்கை வைரல்.. குடும்பமே உதய்பூரில் தனிமைப்படுத்தல்..

by Chandru, Dec 3, 2020, 10:10 AM IST

விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நிஹாரிகா. இவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் அண்ணன் நாகபாபுவின் மகள் ஆவார். நிஹாரிகா சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். நிஹாரிகாவுக்கும் தொழில் அதிபர் சைதன்யா வி.ஜே என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த 2 மாதத்துக்கு முன் நடந்தது.

அதில் சிரஞ்சீவி மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். நிஹாரிகா. சைதன்யா வி ஜே திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள ஆடம்பர அரண்மனை நட்சத்திர ஓட்டலான ஓபராய் உதய்விலாஸில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 9ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க சில நாட்களுக்கு முன்பு நிஹாரிகா உதய்ப்பூர் புறப்பட்டு சென்றார். திருமணத்தில் சிரஞ்சீவி குடும்பத்தினர் ஒட்டு மொத்தமாக பங்கேற்கின்றனர்.

இதற்காக அவர்களும் திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்பே ராஜஸ்தான் புறப்பட்டு சென்று அங்கு கொரோனா கட்டுப்பாட்டின்படி தனிமைப்படுத்தலில் இருந்து விட்டு பிறகு திருமணத்தில் கலந்து கொள்கின்றனர். பின்னர் 11ம் தேதி ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நடக்கிறது. இதில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர். திருமணத்துக்காக அச்சிடப்பட்டிருக்கும் நிஹாரிகாவின் திருமண அழைப்பிதழ் சில்வர் பாக்ஸில் பத்திரிகைகள் அடங்கிய பேழையாக உள்ளது. இது இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.இதற்கிடையில் நிஹாரிகா வருகால கணவர் சைதன்யாவுடன் ஜோடியாக இருக்கும் படத்தை நெட்டில் தினமும் பகிர்ந்து வருகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட மெசேஜில், இப்போது திருமண நாளுக்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது எனத் தெரிவித்திருக்கிறார் நிஹாரிகா.

நடிகர் சிரஞ்சீவி ஏற்கனவே கடந்த மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டதாகக் கூறியதுடன் தான் பங்கேற்க விருந்த ஆச்சார்யா படப்பிடிப்பை ரத்து செய்தார். சில தினங்களுக்கு பிறகு தனியார் மருத்துவமனையில் அவர் கொரோனா பரிசோதனை செய்தபோது தொற்று இல்லை என்பது உறுதியானது. முதலில் எடுக்கப்பட்ட டெஸ்ட் பழுதான கருவியால் தொற்று இருப்பதாகக் கூறப்பட்டது ஆனால் எனக்கு கொரோனா தொற்று இல்லை என்று சிரஞ்சீவி தெரிவித்தார், ஆனாலும் அவரை தனிமைப்படுத்தலில் இருக்கும்படி அரசு சுகாதாரத் துறையினர் கேட்டுக் கொண்டனர். தற்போது அண்ணன் மகள் நிஹாரிகாவின் திருமண விழாவில் பங்கேற்கச் சிரஞ்சீவி உதய்பூர் செல்கிறார். திருமணம் முடிந்த பிறகு தான் நடிக்கும் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை